மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

21-வது கால்நடை கணக்கெடுப்புக்கான மென்பொருள் மற்றும் இனவகைகள் குறித்து ஜம்மு - காஷ்மீர் & லடாக் அதிகாரிகளுக்கு பயிற்சி

Posted On: 09 AUG 2024 4:42PM by PIB Chennai

மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சத்திற்கு உட்பட்ட கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை, 21-வது கால்நடை கணக்கெடுப்புக்கான மென்பொருள் மற்றும் இனவகைகள் குறித்து ஜம்மு- காஷ்மீர் & லடாக் யூனியன் பிரதேச மற்றும் மாவட்ட அளவிலான பொறுப்பு அதிகாரிகளுக்கு பயிற்சி வகுப்பை நடத்தியுள்ளது.

2024 செப்டம்பர்- டிசம்பர் மாதங்களில் மேற்கொள்ளப்படவுள்ள 21-வது கால்நடை கணக்கெடுப்பை நடத்துவதற்காக, புதியதாக தொடங்கப்பட்ட செல்போன் செயலி மற்றும் இணையப் பயன்பாடுகள்  குறித்து  ஸ்ரீநகரில் நடைபெற்ற இந்தப் பயிலரங்கில், பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிலரங்கில் கால்நடை பராமரிப்பு புள்ளிவிவரப் பிரிவின் 21 வது கால்நடை கணக்கெடுப்பின் சுருக்கமான விளக்கத்துடன் தொடங்கி பல்வேறு அமர்வுகள் இடம்பெற்றன, அதைத் தொடர்ந்து ஸ்ரீ பி பி மிஸ்ரா மற்றும் .சி..ஆர்-தேசிய விலங்கு மரபணு வளங்கள் பணியக (என்.பி..ஜி.ஆர்) குழுவினரின் விரிவான விளக்கக்காட்சி கணக்கெடுப்பில் உள்ளடக்கப்பட வேண்டிய உயிரினங்களின், இன விவரங்கள் குறித்து விளக்கப்பட்டது. துல்லியமான இன அடையாளத்தின் முக்கியத்துவம்  குறித்து வலியுறுத்தப்பட்டது. இது கால்நடை பராமரிப்புத் துறையின் பல்வேறு திட்டங்களில் பயன்படுத்தப்படும் துல்லியமான புள்ளிவிவரங்களை உருவாக்குவதற்கும் நிலையான அபிவிருத்தி இலக்குகளின் தேசிய குறியீடு கட்டமைப்பிற்கும் (என்ஐஎஃப்) முக்கியமானது.

இந்த பயிலரங்கில், மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் மென்பொருள் குழுவினரால் 21 வது கால்நடை கணக்கெடுப்பின் வழிமுறைகள் மற்றும் மென்பொருள் நேரடி பயன்பாடு குறித்த விரிவான அமர்வுகள் இருந்தன, இதற்கு மாநில மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கான கைபேசி பயன்பாடு மற்றும் டாஷ்போர்டு மென்பொருள் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த ஒருங்கிணைப்பு அலுவலர்கள் கணக்கெடுப்பாளர்களுக்கு அந்தந்த மாவட்டத் தலைமையிடங்களில் பயிற்சி அளிக்க வேண்டும்.

வி.பி.சிங் அவர்களின் நன்றியுரையுடன் பயிலரங்கு நிறைவுற்றது. அவர் தனது உரையில், அனைத்து பிரமுகர்கள் மற்றும் பங்குதாரர்களின் வருகைக்கு நன்றி தெரிவித்ததோடு, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கை வெற்றிகரமாக இருக்கும் என்ற நம்பிக்கையான குறிப்புடன் முடித்தார்.

***

MM/AG/DL



(Release ID: 2043905) Visitor Counter : 5


Read this release in: English , Hindi