அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக் கதையை உயிரி பொருளாதாரம் முன்னெடுத்துச் செல்லும்: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 08 AUG 2024 7:18PM by PIB Chennai

டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் இன்று நடைபெற்ற தேசிய பயோஃபார்மா மிஷன் கான்க்ளேவில் தேசிய உயிரி மருந்து இயக்கம் குறித்த 'தாக்க அறிக்கை 2024' வெளியீட்டு விழாவில் பேசிய மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், "இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக் கதையை, உயிரி பொருளாதாரம் மற்றும் விண்வெளி பொருளாதாரம் முன்னெடுத்துச் செல்லும்" என்று கூறினார்.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), டாக்டர் ஜிதேந்திர சிங், உயிரி தொழில்நுட்பத் தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சிலுடன் (BIRAC) இணைந்து, தேசிய உயிரி மருந்து இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து அதன் பயணத்தை நினைவு கூர்ந்து, "தேசிய உயிரி மருந்து இயக்கம் (NBM) முன்னோடி வெற்றியின் 5 ஆண்டுகளைக் கொண்டாடுகிறது" என்று குறிப்பிட்டார்.

தேசிய உயிரி மருந்து இயக்கம் (NBM) – இந்தியாவில் புத்தாக்கம் (I3) என்பது, உயிரி-மருந்தியல் மேம்பாட்டிற்கான கண்டுபிடிப்பு ஆராய்ச்சியை விரைவுபடுத்துவதற்கான, தொழில்துறை-கல்வி கூட்டு இயக்கமாகும். உயிரி மருந்துகள், தடுப்பூசிகள், பயோசிமிலர்கள், மருத்துவ சாதனங்கள் மற்றும் நோய் கண்டறிதல் ஆகியவற்றில் இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் தயாரிப்பு மேம்பாட்டு திறன்களை தயாரிப்பதற்கான சுற்றுச்சூழல் அமைப்பை செயல்படுத்துவதற்கும், வளர்ப்பதற்கும் BIRAC ஆணை உள்ளது. 250 மில்லியன் அமெரிக்க டாலர் மொத்த செலவில் இந்த கருத்திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதுடன், இது உலக வங்கியின் 50% இணை நிதியாகும். இன்று சுமார் 150 நிறுவனங்களும், 300 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றன.

உயிரி தொழில்நுட்பத்தின் தாக்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய டாக்டர் சிங், 2014-ல் 10 பில்லியன் டாலராக இருந்த இந்தியாவின் உயிரி பொருளாதாரம் கடந்த 10 ஆண்டுகளில் 13 மடங்கு அதிகரித்து 130 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்றும் 2024.It 2030-ல் 300 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்றார். "2015-ம் ஆண்டில் 81-வது இடத்தில் இருந்த இந்தியா, உலகளாவிய புதுமைப் படைப்பு குறியீட்டில் 132 பொருளாதாரங்களில் 40-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது" என்று அவர் கூறினார்.

இந்தியாவின் முதல் எம்ஆர்ஐ ஸ்கேனர், கோவிட் ஜைகோவ்-டிக்கான முதல் டி.என்.ஏ தடுப்பூசி மற்றும் வகை 2- நீரிழிவு நோய்க்கான இந்தியாவின் முதல் ஊசி போடக்கூடிய இன்சுலின் அல்லாத ஆண்டிஹைபர்கிளைசெமிக் பயோசிமிலர் (லிராகுளுடைடு) போன்ற தேசிய உயிரி மருந்து இயக்கத்தின் சில பங்களிப்புகளை டாக்டர் ஜிதேந்திர சிங் தனது உரையின் போது குறிப்பிட்டார்.

***

MM/AG/DL




(Release ID: 2043367) Visitor Counter : 38


Read this release in: English , Urdu , Hindi