பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடு முழுவதும் பிஎன்ஜி கிடைப்பதை அதிகரிக்க அரசின் நடவடிக்கைகள்

Posted On: 08 AUG 2024 2:35PM by PIB Chennai

குழாய் மூலம் வழங்கப்படும் இயற்கை எரிவாயு (பி.என்.ஜி) திரவ பெட்ரோலிய எரிவாயு (எல்.பி.ஜி) சிலிண்டரை முன்பதிவு செய்தல், கையாளுதல், சேமித்து வைத்தல் மற்றும் அளவிடுதல் போன்ற சிரமங்களை தவிர்க்கிறது. மேலும், காற்றை விட இலகுவாக இருப்பதால், பி.என்.ஜி சமையலுக்கு பாதுகாப்பான எரிபொருளாகும். ஒரு யூனிட்டுக்கான ஆற்றல் உள்ளடக்கத்தின் அடிப்படையில் (கிலோகலோரி / கிலோ), எல்.பி.ஜி.யுடன் ஒப்பிடும்போது பி.என்.ஜி ஒப்பீட்டளவில் சாதகமானது, இருப்பினும் இயற்கை எரிவாயுவின் விலை, கொள்முதல் செய்யப்பட்ட எரிவாயுவின் விலை, மாநில வரிகள், கட்டணம், வழங்கப்பட்ட மானியம், போக்குவரத்து மற்றும் விநியோகச் செலவு போன்ற பல மாறும் காரணிகளைச் சார்ந்துள்ளது.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் (PNGRB), நாடு முழுவதும் சுமார் 33,478 கிலோமீட்டர் நீளமுள்ள இயற்கை எரிவாயு குழாய் நெட்வொர்க்கிற்கு அங்கீகாரம் அளித்துள்ளது. தேசிய எரிவாயு கட்டமைப்பை உருவாக்கவும், நாடு முழுவதும் இயற்கை எரிவாயு கிடைப்பதை அதிகரிக்கவும் இது உதவும். மார்ச் 2024 நிலவரப்படி, தோராயமாக 24,881 கிமீ குழாய் செயல்பாட்டில் உள்ளது மற்றும் 10,404 கிமீ குழாய் கட்டுமானத்தில் உள்ளது.

வீடுகளுக்கு பிஎன்ஜி இணைப்புகளை வழங்குவது, நகர எரிவாயு விநியோக (சிஜிடி) கட்டமைப்பு வளர்ச்சியின் ஒரு பகுதியாகும், மேலும் இது, பிஎன்ஜிஆர்பியால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகிறது. 12/12A சிஜிடி ஏலச் சுற்று முடிந்த பிறகு, 34 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள 733 மாவட்டங்களில் பரவியுள்ள நாட்டின் மொத்த புவியியல் பரப்பில் கிட்டத்தட்ட 100% உள்ளடக்கிய 307 புவியியல் பகுதிகளை (ஜிஏக்கள்) பிஎன்ஜிஆர்பி அங்கீகரித்துள்ளது, 2032 க்குள் நாடு முழுவதும் சுமார் 12.63 கோடி பிஎன்ஜி இணைப்புகளை நிறுவுவதற்கான இலக்குடன். 31.05.2024 நிலவரப்படி, 1.31 கோடி பிஎன்ஜி இணைப்புகள் சிஜிடி நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 5,46,867 அங்குல கிலோமீட்டர் என்ற இலக்கை விட, 31.05.2024 வரை நாடு முழுவதும் 5,20,176 அங்குல கிலோமீட்டர் எஃகு மற்றும் MDPE குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், பிஎன்ஜி (டி) பிரிவில் எரிவாயு பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக, மலிவான உள்நாட்டு எரிவாயுவிலிருந்து வீடுகளுக்கான குழாய் எரிவாயு தேவையை பூர்த்தி செய்ய, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது, இதில் சிஎன்ஜி (போக்குவரத்து) மற்றும் பிஎன்ஜி (உள்நாட்டு) பிரிவுகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, மின்சாரம் மற்றும் பிற முன்னுரிமை அல்லாத துறைகளில் இருந்து, உள்நாட்டு எரிவாயுவை திருப்பி விடுவது அடங்கும்; உள்நாட்டு இயற்கை எரிவாயு ஒதுக்கீட்டில் சிஎன்ஜி (டி) / பிஎன்ஜி (டி) துறைகளை முதல் முன்னுரிமையாக அறிவித்தல்; ஏல நடைமுறையின் கீழ் விகிதாச்சார அடிப்படையில் எரிவாயுவை விநியோகிக்க வேண்டிய எந்தவொரு சூழ்நிலையிலும் உயர் அழுத்த உயர் வெப்பநிலை (HP-HT) எரிவாயுவை வழங்குவதற்கு, சிஎன்ஜி (டி) / பிஎன்ஜி (டி) துறைக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணையமைச்சர் திரு சுரேஷ் கோபி இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

***

MM/AG/DL


(Release ID: 2043324)
Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP