சுற்றுலா அமைச்சகம்
சுற்றுலாவை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம்
Posted On:
08 AUG 2024 2:06PM by PIB Chennai
உள்நாட்டு மற்றும் உலக சந்தைகளில் இந்தியாவின் சுற்றுலாத் தலங்களை சுற்றுலா அமைச்சகம் மேம்படுத்துகிறது. நிகழ்வுகள் மற்றும் சமூக ஊடகங்கள் உட்பட பல்வேறு முயற்சிகள் மூலம் விளம்பரம் மேற்கொள்ளப்படுகிறது.
உள்நாட்டு மேம்பாடு மற்றும் விருந்தோம்பல் உள்ளிட்ட விளம்பரம் (DPPH), ஸ்வதேஷ் தர்ஷன், புனித யாத்திரை புத்துணர்ச்சி மற்றும் ஆன்மீகத்திற்கான தேசிய இயக்கம் (PRASHAD) மற்றும் சுற்றுலா உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கான மத்திய முகமைகளுக்கு உதவி ஆகிய திட்டங்களின் கீழ், கடலோர மற்றும் நகர்ப்புற பகுதிகள் உள்ளிட்ட சுற்றுலாவை மேம்படுத்தவும், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அமைச்சகம் நிதி உதவி அளிக்கிறது.
டி.பி.பி.எச், ஸ்வதேஷ் தர்ஷன், பிரஷாத் திட்டங்களின் கீழ் நாட்டில் சுற்றுலா உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்காக மத்திய முகமைகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இதன்படி, தமிழ்நாட்டில் உள்நாட்டு ஊக்குவிப்பு, விளம்பரம் மற்றும் விருந்தோம்பல் திட்டத்தின் கீழ் 2015-16 முதல் 2022-23 வரை மாமல்லபுரம் நாட்டியத் திருவிழா, குமரித் திருவிழா, கலாச்சார சுற்றுலா திருவிழா ஆகியவற்றை நடத்த ரூ. 1 கோடியே 83 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. சுதேசி தர்ஷன் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் சென்னை-மாமல்லபுரம் மற்றும் ராமேஸ்வரம்- மணப்பாடு-கன்னியாகுமரி பகுதிகளில் கடற்கரை சுற்றுலாவை மேம்படுத்த ரூ.7103 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது. சுதேசி தர்ஷன் 2.0 திட்டத்தின்படி, தமிழ்நாட்டில் மாமல்லபுரம் கடற்கரை கோயில்கள் மேம்பாட்டிற்காக ரூ.3002 லட்சங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. பிரசாத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் நகருக்கு ரூ.1399 லட்சமும், வேளாங்கன்னிக்கு ரூ.486 லட்சமும் வழங்கப்பட்டுள்ளன. சுற்றுலா கட்டமைப்பு மேம்பாட்டுக்காக மத்திய முகமைகளுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தின் கீழ் சென்னை துறைமுக நிர்வாகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து முனையம் அமைப்பதற்காக ரூ.1724.66 லட்சம் ரூபாயும், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த ரயில் நிலையங்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் ராமேஸ்வரத்திற்கு ரூ.376 லட்சமும், மதுரைக்கு ரூ.356 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
***
MM/AG/KR/DL
(Release ID: 2043319)