சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
எளிதில் அணுகக்கூடிய நீதி அமைப்பை உறுதி செய்ய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள்
Posted On:
08 AUG 2024 1:01PM by PIB Chennai
சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினருக்கு எளிதான, அணுகக்கூடிய மற்றும் கட்டுப்படியான நீதி அமைப்பை உறுதி செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
2023, ஏப்ரல் முதல் 2024 ஜூன் வரையிலான காலகட்டத்தில், 18.86 லட்சம் நபர்களுக்கு இலவச சட்ட சேவைகள் வழங்கப்பட்டுள்ளன, மேலும் 12.08 கோடி வழக்குகள் (நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன மற்றும் வழக்குகளுக்கு முந்தைய நிலையில் உள்ள தகராறுகள் மக்கள் நீதிமன்றங்கள் மூலம் தீர்க்கப்பட்டுள்ளன.
கூடுதலாக சட்டப்பணிகள் ஆணைக்குழுக்கள் சட்டம், 1987-ன் பிரிவு 12-ன் கீழ் இலவச சட்ட உதவிக்கு தகுதியான நபர்களை பொதுநல வழக்கறிஞர்களுடன் இணைக்க பொதுநல சேவைத் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 11,227 வழக்குரைஞர்கள் பதிவு செய்யப்பட்டு, பயனாளிகளால் 3,474 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அரசால் நடத்தப்படும் தொலைச்சட்ட உதவித் திட்டம், இலவச சட்ட உதவி பெற உரிமை பெற்ற நபர்கள் உட்பட பொதுமக்களுக்கு சட்ட ஆலோசனைகளை வழங்குகிறது, தொலைச்சட்ட உதவி மூலம் இதுவரை 93.19 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு சேவை செய்துள்ளது.
மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகுவதை உறுதி செய்வது உட்பட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொறுப்பு முதன்மையாக அந்தந்த மாநில அரசுகளிடம் உள்ளது. மாவட்ட மற்றும் சார்நிலை நீதிமன்றங்களில் நீதித்துறை உள்கட்டமைப்புகளை மத்திய நிதியுதவித் திட்டத்தின் மூலம் மாநிலங்களின் நிதி ஆதாரங்களை மத்திய அரசு பூர்த்தி செய்கிறது. நீதித்துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக மத்திய சேவை திட்டத்தின் கீழ், வழக்கறிஞர்கள் மற்றும் வழக்காடுபவர்களின் வசதிக்காக நீதிமன்றக் கட்டடங்கள், குடியிருப்புகள், வழக்கறிஞர் அரங்குகள், கழிப்பறை வளாகங்கள் மற்றும் டிஜிட்டல் கணினி அறைகள் கட்டுவதற்கு நிதி வழங்கப்படுகிறது. இருப்பினும், மத்திய பொதுப்பணித்துறை, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை வகுத்துள்ளபடி, மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல் விதிமுறைகளுக்கு இணங்க மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு நிதி விடுவிக்கப்படுகிறது.
இந்த தகவலை மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு அர்ஜுன் ராம் மேக்வால் மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2042985
-------------
IR/RS/KR
(Release ID: 2043081)
Visitor Counter : 69