உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இடதுசாரி தீவிரவாதம்

Posted On: 07 AUG 2024 4:51PM by PIB Chennai

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையின்படி, காவல்துறை மற்றும் பொது ஒழுங்கு சம்பந்தப்பட்ட துறைகள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. இருப்பினும், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முயற்சிகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக உள்ளது. இடதுசாரி தீவிரவாதத்தை முழுமையாக எதிர்கொள்ள தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டத்திற்கு 2015-இல் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள், வளர்ச்சி தலையீடுகள், உள்ளூர் சமூகங்களின் உரிமைகளை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய பல்முனை உத்திகளுக்கு இது வழிவகை செய்கிறது. இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநில அரசுக்கு மத்திய ஆயுத காவல் படை பட்டாலியன்கள், பயிற்சி, மாநில காவல் படைகளின் நவீனமயமாக்கலுக்கான நிதி, உபகரணங்கள் மற்றும் ஆயுதங்கள், உளவுத் தகவல்களை பகிர்ந்து கொள்ளுதல், பலப்படுத்தப்பட்ட காவல் நிலையங்களை நிர்மாணித்தல் போன்ற  நடவடிக்கைகளை மத்திய அரசு  மேற்கொள்கிறது. வளர்ச்சியைப் பொறுத்தவரை, முன்னோடித் திட்டங்கள் தவிர, இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில், சாலைக் கட்டமைப்பை விரிவுபடுத்துதல், தொலைத்தொடர்பு இணைப்பை மேம்படுத்துதல், திறன் மற்றும் நிதி உள்ளடக்கம் ஆகியவற்றில் சிறப்பு உந்துதலுடன் மத்திய அரசு பல்வேறு குறிப்பிட்ட முயற்சிகளை எடுத்துள்ளது.

 

2014-15 முதல் கடந்த 10 ஆண்டுகளில் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் திறன் மேம்பாட்டிற்காக, சிறப்பு உள்கட்டமைப்புத் திட்டம், பாதுகாப்பு தொடர்பான செலவினம் மற்றும் சிறப்பு மத்திய உதவித் திட்டங்கள் ஆகியவற்றின் கீழ் ரூ.6908 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பாதுகாப்பு முகாம்களில் முக்கியமான கட்டமைப்புகளை சரிசெய்யவும் ஹெலிகாப்டர்கள் மற்றும் இடதுசாரி தீவிரவாத மேலாண்மைக்கான மத்திய முகமைகள் திட்டத்தின் கீழ் ரூ.1000 கோடி வழங்கப்பட்டுள்ளது.

2010-இல் இடதுசாரி தீவிரவாதம் வன்முறை சம்பவங்கள் அதிகமாக இருந்த நிலையில், தற்போது 73% குறைந்துள்ளது. இதன் விளைவாக ஏற்படும் இறப்புகள் (பொதுமக்கள் + பாதுகாப்புப் படையினர்) 2010 இல் 1005 ஆக இருந்தது,  2023 இல் 138 ஆக, 86% குறைந்து   குறைந்துள்ளது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு. நித்யானந்த் ராய் இதனைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2042680

 

BR/KR

 

***


(Release ID: 2042978) Visitor Counter : 50


Read this release in: English , Urdu , Hindi