கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கூட்டுறவுச் சங்கங்களில் மீன்வளம்

Posted On: 07 AUG 2024 4:52PM by PIB Chennai

மீன்வளத்துறையின் கீழ்க்கண்ட திட்டங்கள் உட்பட மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து, அடுத்த ஐந்து ஆண்டுகளில், நாட்டில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தவும், அடிமட்ட அளவில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தவும், புதிய பல்நோக்கு அல்லது தொடக்க பால் பண்ணை/மீன்வள கூட்டுறவு சங்கங்களை நாட்டின் இதுவரை செயல்படுத்தப்படாத பஞ்சாயத்து / கிராமங்களில் நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது.  இத்திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

 

1.         பிரதமரின் மீன் வளத் திட்டம் மீன் உற்பத்தி, உற்பத்தித் திறன், தரம், தொழில்நுட்பம், அறுவடைக்குப் பிந்தைய உள்கட்டமைப்பு மற்றும் மேலாண்மை, நவீனமயமாக்கல் மற்றும் மதிப்புச் சங்கிலியை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் உள்ள முக்கியமான இடைவெளிகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பயனாளிகள் மொத்த திட்ட செலவு / அலகு செலவில் 40% முதல் 60% வரை நிதி உதவி பெற தகுதியுடையவர்கள்.

 

2.         கடற்தொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு உட்கட்டமைப்பு நிதியம் கடல் மற்றும் உள்நாட்டு மீன்வளத் துறையில் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதை FIDF நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தில் பனிக்கட்டி நிலையங்கள் அமைத்தல், குளிர்பதன கிடங்குகள், மீன் போக்குவரத்து மற்றும் குளிர்பதன தொடர் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல், சினை மீன் வங்கிகள் அமைத்தல், மீன் பதப்படுத்தும் அலகுகள், மீன் தீவன ஆலைகள் / ஆலைகள் மற்றும் நவீன மீன் சந்தைகளை உருவாக்குதல் ஆகியவை அடங்கும். இத் திட்டங்கள் மேலே குறிப்பிடப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ஆண்டுக்கு 3% வட்டி மானியம் பெற தகுதியுடையவை.

 

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு), தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம், தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம், தேசிய அளவிலான கூட்டுறவு இணையங்கள் மற்றும் மாநில அரசுகளின் உதவியுடன் மீன்வளம் மற்றும் இதர கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்ட புதிய தொடக்க கூட்டுறவு சங்கங்கள் அமைக்கும் திட்டம் தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இது தவிர, தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம், இந்தியாவின் கடலோர மாநிலங்களான ஆந்திரப்பிரதேசம், மேற்கு வங்காளம், கேரளா, தமிழ்நாடு, கோவா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் 910 தொடக்க மீன்வள கூட்டுறவு நிறுவனங்களை மீன்வளர்ப்பு உற்பத்தியாளர் அமைப்புகளாக மேம்படுத்த தேர்வு செய்துள்ளது. மேலும் 70 புதிய உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை கூட்டுறவுத் துறையில் பதிவு செய்துள்ளது. தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம், மகாராஷ்டிர அரசு மற்றும் குஜராத் கூட்டுறவுச் சங்கங்களுக்கு 44 ஆழ்கடல் இழுவைப் படகுகள் வாங்க நிதியுதவி அளித்துள்ளது.

 

மேற்கண்ட நடவடிக்கைகள், மீன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள குறு மீனவர்கள் உள்ளிட்ட சிறு மற்றும் குறு மீனவர்களுக்குத் தேவையான முன்னோடி மற்றும் பின்னோக்கு இணைப்புகள், திறன் மேம்பாடு, பதப்படுத்துதல் மற்றும் குளிர்பதன உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, அதன் மூலம் அவர்களின் வருமானத்தை அதிகரிக்க இயலும். கண்டறியப்பட்ட திட்டங்களின் கீழ் கிடைக்கும் பயன்களை குறு மீனவர்கள் நவீனப்படுத்தவும், தரம் உயர்த்தவும், பல்வேறு மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு தொடர்பான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி அவர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க இயலும்.

 

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா இதனைத் தெரிவித்தார்.

 

***

(Release ID: 2042681)

PKV/RR/KR


(Release ID: 2042976) Visitor Counter : 62


Read this release in: Urdu , English , Hindi