புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையங்களுக்கான விதிமுறை

Posted On: 07 AUG 2024 3:45PM by PIB Chennai

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் (எம்.என்.ஆர்.இ) பிரதமரின் சூரிய மின்சக்தி மின்சாரத் திட்டத்தின் கீழ் கூரை சூரிய சக்தி (ஆர்.டி.எஸ்) மின் திட்டத்தை நிறுவுவதற்கு பட்டியல் சாதியினர், பழங்குடியினர் உட்பட எந்தவொரு தனிநபரும் நிதி உதவி த் தகுதியுடையவர்கள்.

 

பிரதமரின் வேளாண் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தனித்தியங்கும் சூரிய விவசாய பம்புகளை நிறுவுவதற்கும், விவசாய பம்புகளை சூரிய ஒளிமயமாக்குவதற்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் உட்பட எந்தவொரு விவசாயியும் நிதி உதவி பெற தகுதியுடையவர்கள்.

 

கூடுதலாக, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், புதிய சூரிய மின்சக்தி திட்டத்தை (குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்கள் / கிராமங்களுக்கு) செயல்படுத்தி வருகிறது, இது பழங்குடியினர் விவகார அமைச்சகத்தால் அடையாளம் காணப்பட்ட மின்சார வசதி இல்லாத வீடுகளை மின்மயமாக்குகிறது, மின்சாரம் கிடைக்காத மற்றும் தொழில்நுட்ப-பொருளாதார ரீதியாக சாத்தியமில்லாத இடங்களில் சூரிய அமைப்புகளை வழங்குவதன் மூலம், மின்சாரம் கிடைக்கச் செய்யலாம். புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் சூரியசக்தி திட்டங்களின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உள்ளிட்ட   வழங்கப்படும் ஊக்கத்தொகைகள் வழங்கப்படுகின்றன.

 

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணையமைச்சர் திரு. ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

***

(Release ID: 2042620)

PKV/RR/KR


(Release ID: 2042938) Visitor Counter : 50


Read this release in: English , Urdu , Hindi