மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையின் கீழ் செயல்படும் மத்திய அளவிலான வங்கியாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது

Posted On: 07 AUG 2024 1:20PM by PIB Chennai

கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறைக்கான மத்திய அளவிலான வங்கியாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் 5ஆகஸ்ட்2024 அன்று புதுதில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை செயலாளர் திருமதி அல்கா உபாத்யாயா கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். மத்திய கால்நடை பராமரிப்புத்துறை, நபார்டு, சிறுதொழல் வளர்ச்சி வங்கி, தேசிய பால்வள வாரியம், தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட கடன் வழங்கும் வங்கிகளின் பிரதிநிதிகள், கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

திருமதி அல்கா உபாத்யாயா தனது தொடக்க உரையில், இந்தியாவின் கால்நடைத் துறையின் வளர்ச்சிக்கு வங்கிகளின் மகத்தான பங்களிப்பைப் பாராட்டினார். இந்தியா பால் உற்பத்தியில் முன்னணி நாடாகவும், முட்டை மற்றும் மீன் உற்பத்தி செய்யும் மூன்றாவது பெரிய நாடாகவும், இறைச்சி மற்றும் கோழி உற்பத்தி செய்யும் ஐந்தாவது பெரிய நாடாகவும் இருப்பதால், இந்த தயாரிப்புகளை உணவில் சேர்ப்பது, புரதக் குறைபாட்டை நிவர்த்தி செய்யலாம், இது உணவு பாதுகாப்பின்மை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்க, குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும். பின்னர் இந்தியாவின் உணவு பட்டினி குறியீட்டை எதிர்த்துப் போராடுகிறது. மேலும், தன்னிறைவை நோக்கி இந்தியாவை வழிநடத்துவதற்கும், ஏற்றுமதி திறனை அதிகரிப்பதற்கும், ஒழுங்கமைக்கப்பட்ட செயலாக்க திறன்களை மேம்படுத்துவதற்கும், கடன் இணைக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம், வங்கிகள் முக்கியப் பங்கு வகிக்க முடியும்

கூடுதல் செயலாளர் (கால்நடை மற்றும் பால்வளம்) திரு வர்ஷா ஜோஷி கூட்டத்தில் உரையாற்றினார், இந்தியாவின் கால்நடை பராமரிப்புத் துறையை மாற்றியமைப்பதில் கடன் வழங்கும் முகமைகளின் முக்கியப் பங்கை அவர் வலியுறுத்தினார்.

பங்கேற்பாளர்களை வரவேற்று உரையாற்றிய இணைச் செயலாளர் (என்.எல்.எம்) டாக்டர் ஓ.பி.சவுத்ரி, இந்தியாவின் பொருளாதாரத்தில் கால்நடைத் துறையின் முக்கியத்துவம், வேலைவாய்ப்பை வழங்குதல் மற்றும் நாடு முழுவதும் வாழ்வாதாரங்களை ஆதரித்தல் ஆகியவற்றை எடுத்துரைத்தார். உள்நாட்டு மீன்வளத்துறை இணைச் செயலாளர் திரு சாகர் மெஹ்ரா மீன்வளத் துறையின் கீழ் பல்வேறு திட்டங்களை ஆதரிப்பதில் வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களின் பங்கு குறித்து சுருக்கமாக எடுத்துரைத்தார்.

கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (AHIDF), தேசிய கால்நடை இயக்கம்-தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (NLM-EDP) மற்றும் கிசான் கடன் அட்டை (KCC) உள்ளிட்ட DAHD திட்டங்களின் பல்வேறு அம்சங்கள் குறித்து, ஆழமான விவாதங்கள் நடத்தப்பட்டன. உள்ளடக்கப்பட்ட தலைப்புகளில் சாதனைகள், வழிகாட்டுதல் மாற்றங்கள், போர்டல் பயன்பாடு, நிலுவையில் உள்ள சிக்கல்கள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களிடமிருந்து தேவைப்படும் பங்கு மற்றும் ஆதரவு ஆகியவை அடங்கும். பிணையம் இல்லாத காரணத்தால் சிறு தொழில் முனைவோருக்கு குறைந்த அளவே நிதி கிடைப்பது, தகுதியான திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் தாமதம், வட்டி மானியக் கோரிக்கைகள் மற்றும் ஆதரவு ஆவணங்களை உரிய காலத்தில் சமர்ப்பித்தல் மற்றும் கடன் வழங்கியவர்களிடமிருந்து கருத்துக்கள் போன்ற சவால்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

---

MM/KPG/DL


(Release ID: 2042822) Visitor Counter : 68