சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
இந்திய சாலை உள்கட்டமைப்பில் உயிரி தார்க்கலவை பயன்பாடு
இடுகை இடப்பட்ட நாள்:
07 AUG 2024 1:02PM by PIB Chennai
ஆய்வகத்தில் உயிரி தார்க்கலவையை மதிப்பீடு செய்யவும், உயிரி தார்க்கலவையால் அமைக்கப்பட்ட நடைபாதையின் நீண்டகால செயல்திறனை மதிப்பிடவும், டேராடூனில் உள்ள இந்திய பெட்ரோலிய நிறுவனத்துடன் (IIP) இணைந்து ஐ.ஐ.டி ரூர்க்கி மற்றும் புதுதில்லியில் உள்ள மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் (சி.ஆர்.ஆர்.ஐ) ஆகியவற்றிற்கு, தலா ஒன்று வீதம் இரண்டு (02) ஆராய்ச்சி திட்டங்களுக்கு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
சாலை கட்டுமானத்தில் உயிரி தார்க்கலவையின் பொருத்தத்தை மதிப்பிடுவதற்காக, மூன்று ஆண்டு காலத்திற்கு செயல்திறன் கண்காணிப்புக்காக நவம்பர் 2022-ல் NH-709AD-ன் ஷாம்லி - முசாபர்நகர் பிரிவில் ஒரு சோதனைப் பிரிவும் போடப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 40-ல் ஜோராபத்-ஷில்லாங் பிரிவில் உயிரி தாரக்கலவை மூலம் சோதனை நடத்துவது குறித்தும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆலோசித்துள்ளது. தார்க்கலவை இறக்குமதியைக் குறைத்தல், பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல் மற்றும் விவசாயிகள், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வருவாய் ஈட்டித் தருவதுடன், வேலைவாய்ப்பு அளிப்பதும் உயிரி தார்க்கலவையின் எதிர்பார்க்கப்படும் நன்மைகளாகும்.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
----
MM/KPG/KR/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2042786)
வருகையாளர் எண்ணிக்கை : 77