விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வேளாண் துறைக்கு ரூ.1,32,469.86 கோடி நிதி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

Posted On: 06 AUG 2024 6:07PM by PIB Chennai

விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட மத்திய அரசு, பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாநில அரசுகளுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. வேளாண்மை மாநில அரசின் பட்டியலில் இருப்பதால், மத்திய அரசு, தகுந்த கொள்கை நடவடிக்கைகள் மற்றும் வரவு செலவுத் திட்ட ஆதரவு மூலம் மாநிலங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக உள்ளது. 2013-14 ம் ஆண்டில் வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டை ரூ.27,662.67 கோடியிலிருந்து 2024-25 ம் ஆண்டில் ரூ.1,32,469.86 கோடியாக அரசு கணிசமாக உயர்த்தியுள்ளது.

பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு திட்டம்

பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம்

வேளாண் துறைக்கான நிறுவனக் கடன்

உற்பத்திச் செலவைப் போல் ஒன்றரை மடங்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம்

நாட்டில் இயற்கை வேளாண்மையை ஊக்குவித்தல்

ஒரு துளி நீரில் அதிக பயிர்

நுண்ணீர் பாசன நிதி

உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை ஊக்குவித்தல்

தேசிய தேனீ வளர்ப்பு மற்றும் தேன் இயக்கம்

வேளாண் இயந்திரமயமாக்கல்

விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்குதல்

தேசிய வேளாண் சந்தை விரிவாக்க தளம் அமைத்தல்

சமையல் எண்ணெய்களுக்கான தேசிய இயக்கம்எண்ணெய் பனை  தொடக்கம்

வேளாண் உள்கட்டமைப்பு நிதி

வேளாண் விளைபொருள் தளவாடங்களை மேம்படுத்துதல், வேளாண் ரயில் அறிமுகம்.

ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சிக்கான இயக்கம் - தொகுப்பு மேம்பாட்டுத் திட்டம் போன்ற திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

தோட்டக்கலைத் துறையின் முழுமையான வளர்ச்சிக்காக ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டு இயக்கத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் சிப்பம் கட்டும் கூடங்கள், ஒருங்கிணைந்த சிப்பம் கட்டும் கூடம், குளிர்பதன கிடங்குகள், பழுக்க வைக்கும் அறை போன்ற பல்வேறு தோட்டக்கலை நடவடிக்கைகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.  இத்திட்டத்திற்கென அரசின் நிதியுதவி பொதுப் பகுதிகளில் திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதமும், மலைப்பகுதி மற்றும் பழங்குடியினப் பகுதிகளில் திட்ட மதிப்பீட்டில் 50 சதவீதமும் அந்தந்த மாநில தோட்டக்கலை இயக்கங்கள் மூலம் வழங்கப்படுகிறது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு. ராம்நாத் தாக்கூர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2042236

***

(Release ID: 2042236)

IR/KV/KR

 


(Release ID: 2042673) Visitor Counter : 55


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP