கூட்டுறவு அமைச்சகம்
தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் கணினி மயமாக்கல்
Posted On:
06 AUG 2024 4:37PM by PIB Chennai
நாட்டில் இதுவரை, 30 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 67,930 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களை (PACS). கணினிமயமாக்குவதற்கான முன்மொழிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, இதற்காக சம்பந்தப்பட்ட மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.654.23 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தமிழ்நாட்டில் 4,532 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.45,68,20,000 விடுவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தங்கள் பிஏசிஎஸ்களை கணினிமயமாக்கிய மாநிலங்கள் இத்திட்டத்துடன் ஒருங்கிணையலாம். இத்திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, மாநிலங்கள் தங்களது மென்பொருளை தேசிய பிஏசிஎஸ் மென்பொருளுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நிபந்தனைக்குட்பட்டு, ஏற்கனவே கணினிமயமாக்கப்பட்ட ஒவ்வொரு பிஏசிஎஸ்-க்கும் ரூ. 50,000/- திருப்பி அளிக்கப்படும்.மேலும், அவற்றின் வன்பொருள்கள் தேவையான விவரக்குறிப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் பிஏசிஎஸ்-ஐ கணினிமயமாக்கும் பணியை 2017 பிப்ரவரி 1 அல்லது அதற்குப் பிறகு அதாவது பிஏசிஎஸ் அமைப்பை கணினிமயமாக்க மத்திய பட்ஜெட்டில் அறிவித்த தேதி மாநில அரசு தொடங்கியிருக்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ், செயல்பாட்டில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை கணினிமயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்படி செயல்படும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களையும், மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மூலம் நபார்டு வங்கியுடன் இணைத்து, நிறுவன ஆதார திட்டமிடல் அடிப்படையிலான பொதுவான தேசிய மென்பொருள் மூலம் கொண்டு வர வழிவகை செய்யப்பட்டுள்ளது.ERP (நிறுவன வள திட்டமிடல்) அடிப்படையிலான பொதுவான தேசிய மென்பொருள், பொது கணக்கியல் அமைப்பு (CAS) மற்றும் மேலாண்மை தகவல் அமைப்பு (MIS) மூலம் PACS செயல்திறனில் செயல்திறனைக் கொண்டுவருகிறது.
மேலும், தொடக்கக் வேளாண் கூட்டுறவு சங்கங்களின் நம்பகத்தன்மையை அதிகரிக்கவும், அவற்றை பஞ்சாயத்து அளவில் துடிப்பான பொருளாதார நிறுவனங்களாக அவர்களை உருவாக்கும் வகையில் அவற்றின் வணிக நடவடிக்கைகளை பல்வகைப்படுத்தவும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கான மாதிரி விதிகள் அரசால் தயாரிக்கப்பட்டுள்ளது.
பால்பண்ணை, மீன் வளர்ப்பு, மலர் சாகுபடி, கிடங்குகள் அமைத்தல், உணவு தானியங்கள், உரங்கள், விதைகள் கொள்முதல், சமையல் எரிவாயு / சிஎன்ஜி / பெட்ரோல்/டீசல் விற்பனை மையம், குறுகிய கால மற்றும் நீண்ட கால கடன், சாதனங்களை வாடகைக்கு விடும் மையங்கள், பொது சேவை மையங்கள், நியாய விலைக் கடைகள் (FPS), சமுதாய பாசனம், வணிக தொடர்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வணிக நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், PACS தனது வணிக நடவடிக்கைகளை பல்வகைப்படுத்த உதவும். மாதிரி துணை விதிகளை பின்பற்றுவதன் மூலம், பிஏசிஎஸ் பல்வகை சேவை மையங்களாக செயல்பட முடியும். கிராமப்புறங்களில் உறுப்பினராக உள்ள விவசாயிகளின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். பிஏசிஎஸ்-ன் செயல்பாட்டுத் திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமை ஆகியவற்றை மேம்படுத்த அவை உதவும்; வேளாண் உறுப்பினர்களுக்கு வேளாண் கடன் மற்றும் பல்வேறு கடன் அல்லாத சேவைகளை வழங்குவதன் மூலம், அவர்களுக்கு கூடுதல் வருவாய் ஆதாரங்களை அளிக்கிறது. இப்போது, வங்கி, காப்பீடு, ஆதார் பதிவு / புதுப்பித்தல், சுகாதார சேவைகள், சட்ட சேவைகள் உள்ளிட்ட பொது சேவை மையங்களால் வழங்கப்படும் 300-க்கும் மேற்பட்ட மின்னணு சேவைகளை கிராமப்புற குடிமக்களுக்கு வழங்க பிஏசிஎஸ்சில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
13 கோடிக்கும் அதிகமான விவசாய உறுப்பினர்கள் 1.05 லட்சம் பிஏசிஎஸ்களுடன் இணைக்கப்பட்டுள்ளனர். கணினிமயமாக்கல்' திட்டத்துடன் இணைக்கப்பட்ட மேற்கண்ட முயற்சிகள் விவசாயிகளுக்கு குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால கடன் வசதிகளை மேம்படுத்துகின்றன. இது PACS-ன் பொருளாதார நடவடிக்கைகளை பல்வகைப்படுத்த உதவுகிறது, இதனால் விவசாய உறுப்பினர்கள் கூடுதல் மற்றும் நிலையான வருவாய் ஆதாரங்களைப் பெற உதவுகிறது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா இதனைத் தெரிவித்துள்ளார்.
***
MM/AG/DL
(Release ID: 2042341)
Visitor Counter : 39