வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

முக்கிய துறைகளில் சிறப்பான செயல்பாட்டை ஊக்குவிக்க, நல்லாட்சி அங்கீகாரம் அறிமுகம்

Posted On: 06 AUG 2024 2:53PM by PIB Chennai

இந்திய தர கவுன்சில் (QCI) QCI நல்லாட்சி அங்கீகாரம் மற்றும் தரவரிசை கட்டமைப்பை அறிமுகப்படுத்துகிறது, வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த, மாநிலங்களிடையே சிறப்பான செயல்பாட்டை ஊக்குவிக்க அதிகாரமளிக்கும் முயற்சியாகும்.இந்த கட்டமைப்பு நான்கு தூண்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது: சிக்ஷா (கல்வி), ஸ்வஸ்தியா (சுகாதாரம்), சம்ரித்தி (செழிப்பு) மற்றும் சுஷாசன் (ஆளுகை). இந்த முக்கிய துறைகளில் மாநிலங்கள் மற்றும் அமைப்புகளின் தரத்திற்கான சிறந்த செயல்திறன் மற்றும் அர்ப்பணிப்பை நல்லாட்சி அங்கீகாரம் அங்கீகரிக்கிறது.

வலுவான அங்கீகாரம் மற்றும் சான்றிதழ் செயல்முறைகள் மூலம் கல்வியின் (சிக்ஷா) தரத்தை மேம்படுத்துதல். நாடு முழுவதும் உயர்தர சுகாதார (ஸ்வஸ்தியா) சேவைகளை உறுதிப்படுத்துதல் மற்றும் ஒவ்வொரு பிராந்தியத்திலும் மிக உயர்ந்த தரமான மருத்துவ சிகிச்சையை நிலைநிறுத்துதல். உற்பத்தி மற்றும் தொழில்துறை நடைமுறைகளில் தர உத்தரவாதத்தினூடாக பொருளாதார வளர்ச்சியை (சம்ரித்தி) மேம்படுத்துதல். தரத்தின் மிக உயர்ந்த தரங்களை நிலைநிறுத்தும் வெளிப்படையான, பொறுப்புக்கூறல் மற்றும் பதிலளிக்கக்கூடிய ஆளுகையை (சுஷாசன்) உறுதி செய்தல்.

ஆகஸ்ட் மாத தரவரிசை, கல்வி, சுகாதாரம், செழிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தினால், வருங்காலத்தில் பொறுப்புள்ள ஆட்சியின் செயல்பாடு வெளிப்படும்.

கல்வி தரவரிசையில், உத்தரபிரதேசம் அதிக எண்ணிக்கையிலான அங்கீகாரங்கள், மதிப்பீடுகள் மற்றும் தரவரிசையுடன் முன்னணியில் உள்ளது.யூனியன் பிரதேசமான டெல்லியும் முக்கிய இடத்தில் உள்ளது.

சுகாதாரப் பிரிவில், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான், மிசோரம் மற்றும் மணிப்பூர் ஆகியவை ஆயுஷ்மான் ஆரோக்கிய திட்டத்தில் (NABH) முழுமையான சான்றிதழுடன் தனித்து நிற்கின்றன, அதே நேரத்தில் மருத்துவ நுழைவு நிலை சோதனை ஆய்வகங்கள் (MELT) தரவரிசையில் (NABL) தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா முன்னணியில் உள்ளன. யூனியன் பிரதேசங்களில், ஆயுஷ்மான் ஆரோக்கிய திட்டத்தில் சண்டிகர் 100% சான்றிதழுடன் சிறந்து விளங்குகிறது, ஜம்மு & காஷ்மீர் 71.43% சான்றிதழ் விகிதம்.டெல்லியைத் தொடர்ந்து ஜம்மு & காஷ்மீர் MELT-ல் சிறந்து விளங்குகிறது.

செழிப்பு பிரிவில், குஜராத், கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் ஆகியவை அதிக எண்ணிக்கையிலான ZED சான்றிதழ்களுடன் முன்னணியில் உள்ளன, குறிப்பாக மைக்ரோ பிரிவில்.ஜம்மு-காஷ்மீர் மற்றும் டெல்லியும் ZED இல் குறிப்பிடத்தக்க சான்றிதழ்களைப் பெற்றன.MSME போட்டி LEAN திட்டத்திற்கு, மகாராஷ்டிரா மற்றும் பீகார் ஆகியவை சிறந்த செயல்திறன் கொண்டவை.

நல்லாட்சி அங்கீகாரம் மற்றும் தரவரிசை கட்டமைப்பை அறிமுகப்படுத்திய கியூசிஐ தலைவர் திரு ஜாக்சே ஷா, "நமது மாநிலங்கள் நமது பலம், அவற்றின் ஒருங்கிணைப்பு ஒரு வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான உந்து சக்தியாகும். சூரஜ்யா திட்டத்தின் மூலம், இந்தியாவின் முக்கிய துறைகளில் உயர் தரநிலைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளை ஊக்குவிப்பதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இது மாநிலங்களுக்கு மிக உயர்ந்த தரத்தை அடையவும் பராமரிக்கவும் வழி வகுக்கிறது.இந்த முயற்சி தரம் மற்றும் தொடர்ச்சியான மேம்பாட்டிற்கான அவர்களின் அர்ப்பணிப்பைக் கொண்டாடுகிறது.

இந்திய தர கவுன்சிலின் நல்லாட்சி அங்கீகாரம் மற்றும் தரவரிசை கட்டமைப்பு, ஆகஸ்ட் 2024 தரவரிசையில் தொடங்கி, நாடு முழுவதும் சிறந்து விளங்குவதற்கான புதிய அளவுகோலை அமைக்கிறது.விரிவான மற்றும் சமச்சீரான மதிப்பீட்டை உறுதி செய்வதற்காக பல்வேறு முயற்சிகளில் மாதாந்திர மற்றும் ஒட்டுமொத்த புள்ளிவிவரங்களை உள்ளடக்கிய தரவரிசை தொகுக்கப்பட்டுள்ளது. தரம் மற்றும் புதுமையில் சிறந்து விளங்கும் மாநிலங்கள் மற்றும் அமைப்புகளை அங்கீகரித்து வெகுமதி அளிப்பதன் மூலம் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.கூட்டு நிர்வாகத்தை மேம்படுத்துதல் மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகியவற்றின் மீது வலுவான முக்கியத்துவத்துடன், இந்த கட்டமைப்பு வளமான மற்றும் தரம் சார்ந்த வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாகும்.

***

MM/AG/DL



(Release ID: 2042290) Visitor Counter : 20


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP