சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நோய்க் கிருமி பாதிப்பை எதிர்த்துப் போராடுவதற்கும் நோய்க் கண்காணிப்பை மேம்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்

प्रविष्टि तिथि: 06 AUG 2024 2:45PM by PIB Chennai

நோய்க் கிருமி பாதிப்பை எதிர்த்துப் போராட மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. 2010 ஆம் ஆண்டில் நோய்க் கிருமி கட்டுப்பாடு குறித்த தேசிய பணிக்குழுவை அமைத்தது உள்ளிட்ட முன்முயற்சிகள், 2011 ஆம் ஆண்டில் நோய்க் கிருமி கட்டுப்பாடு குறித்த தேசியக் கொள்கையை உருவாக்க வழிவகுத்தது. 2013 ஆம் ஆண்டில் நோய்க் கிருமி கட்டுப்பாடு குறித்த தேசிய திட்டத்தை அரசு தொடங்கியது.

 

சுகாதாரம், குடும்ப நல அமைச்சகம் 2017-ம் ஆண்டில் நோய்க் கிருமி கட்டுப்பாடு குறித்த தேசிய செயல் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது நோய்க் கிருமி கட்டுப்பாடு மீதான உலகளாவிய செயல் திட்டத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது. இந்த செயல் திட்டம் பல்வேறு அமைச்சகங்களால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் செயல்பாட்டுக் காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

 

அதைத் தொடர்ந்து நோய்க் கிருமி கட்டுப்பாடு குறித்த தேசிய செயல் திட்டம் 2.0-ன் மேம்பாடு குறித்து 2022-ல் தேசிய நிபுணர்கள் மூலம் ஆலோசனைகள் நடத்தப்பட்டன.

 

மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை இணை அமைச்சர் திருமதி அனுப்பிரியா சிங் படேல் மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2042060

***

SMB/RR/KR


(रिलीज़ आईडी: 2042144) आगंतुक पटल : 128
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP