எரிசக்தி அமைச்சகம்
அனல் மின் உற்பத்தியின் விரிவாக்கம்
Posted On:
05 AUG 2024 3:48PM by PIB Chennai
2031-32 ஆம் ஆண்டிற்குள் மதிப்பிடப்பட்ட மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, மத்திய மின்சார ஆணையம், மின் உற்பத்தி திட்டமிடல் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. ஆய்வு முடிவுகளின்படி, 2032-ஆம் ஆண்டில் நாட்டின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்ய, தேவையான நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி அடிப்படையிலான நிறுவப்பட்ட திறன் தற்போதைய 217.5 ஜிகாவாட்டுக்கு எதிராக 283 ஜிகாவாட்டாக இருக்கும். இதைக் கருத்தில் கொண்டு, 2031-32 க்குள் கூடுதலாக குறைந்தபட்சம் 80 ஜிகாவாட் நிலக்கரி அடிப்படையிலான திறனை அமைக்க இந்திய அரசு முன்மொழிகிறது.
தேசிய மின்சாரத் திட்டத்தில் கருதப்பட்டுள்ளபடி நிலக்கரி அடிப்படையிலான புதிய அனல் மின் திறனை அமைப்பதற்கான மதிப்பிடப்பட்ட மூலதனச் செலவு 1 மெகாவாட்டிற்கு ரூ.34 கோடி (2021-22 விலை மட்டத்தில்) ஆகும். எனவே, கூடுதல் அனல் மின் உற்பத்தி திட்டத்துக்கு குறைந்தபட்சம் ரூ.6,67,200 கோடி தேவைப்படும்.
நிலக்கரி சார்ந்த அனல் மின் நிலையங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்க, புதைபடிவம் அல்லாத எரிபொருள் அடிப்படையிலான மின் உற்பத்தித் திறனை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள் புதைபடிவம் அல்லாத எரிபொருள் அடிப்படையிலான எரிசக்தி வளங்களிலிருந்து சுமார் 50 சதவீத ஒட்டுமொத்த மின்சார நிறுவப்பட்ட திறனை அடைய இந்தியா உறுதிபூண்டுள்ளது.தற்போது, இந்தியா ஏற்கெனவே 45.5% புதைபடிவமல்லாத எரிபொருள் அடிப்படையிலான வளங்களிலிருந்து நிறுவப்பட்ட திறன். தற்போது, இந்தியா ஏற்கனவே 45.5% நிறுவப்பட்ட திறனை புதைபடிவ எரிபொருள் அடிப்படையிலான ஆதாரங்களில் இருந்து அடைந்துள்ளது.
இந்தத் தகவலை மத்திய மின்துறை இணையமைச்சர் திரு. ஸ்ரீபாத் நாயக் மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2041641
BR/KR
***
(Release ID: 2042022)
Visitor Counter : 54