திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
தேசிய திறன் தகுதிகள் கட்டமைப்பு என்பது திறன் அடிப்படையிலானதாகும்
Posted On:
05 AUG 2024 1:03PM by PIB Chennai
மத்திய அரசு 2023 டிசம்பர் மாதத்தில் தேசிய திறன் தகுதிகள் கட்டமைப்பை அறிமுகப்படுத்தியது. 2023 ஜூன் மாதத்தில் அது ஆய்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இந்தக் கட்டமைப்பு ஒரு விளைவு மற்றும் திறன் அடிப்படையிலான கட்டமைப்பாகும். இது கற்றல் விளைவுகளின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட அறிவு, திறன்கள், பொறுப்பு நிலைகளின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட தகுதிகளை ஒழுங்கமைக்கிறது. இதில், தொழிற்கல்வி, பயிற்சி மற்றும் திறன் மற்றும் அனுபவ கற்றல் ஆகியவை அடங்கும், இதில் தொடர்புடைய அனுபவம் மற்றும் தேர்ச்சி தொழில்முறை நிலைகள் அடங்கும்.
தொழிற்கல்வி, பயிற்சி மற்றும் திறன் கற்றல் ஆகியவற்றின் பல்வேறு பரிமாணங்களில், திறன் மற்றும் அனுபவ கற்றல், மதிப்பீட்டிற்கு உட்பட்டு, பெறப்பட்ட தொடர்புடைய அனுபவங்களை உள்ளடக்கியதாகும்.
இந்தத் தகவலை மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு ஜெயந்த் சவுத்ரி மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2041498
---
PKV/KPG/KR/DL
(Release ID: 2041750)
Visitor Counter : 66