சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பவள வெளுப்பு

Posted On: 05 AUG 2024 12:16PM by PIB Chennai

பவளப்பாறைகளை பெருமளவில் வெளுப்பாக்குதல் என்பது கடல் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பால் உலகளாவிய பருவநிலை மாற்றத்தின் காரணமாக உலகளாவிய கடற்பகுதி முழுவதும் ஏற்படும் ஒரு இயற்கை நிகழ்வாகும். இருப்பினும், சாதாரண கடல் நிலைமைகளின் மீட்டெடுப்பைப் பொறுத்து பவளப் பாறைகள் மீட்க பின்னடைவைக் கொண்டுள்ளன.லட்சத்தீவில் 2024 மார்ச் மாதத்தில் பவளப்பாறை வெளுக்கும் நிகழ்வுகள் பதிவாகியுள்ளன.2023, 2022, 2021 மற்றும் 2020 -ம் ஆண்டுகளில், பவளப்பாறை  வெளுப்பு நிகழ்வுகள் குறிப்பிடத்தக்கதாக இல்லை.

லட்சத்தீவு நிர்வாகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, பவளப்பாறைகளை அதிகரிக்க பவள மாற்று நடவடிக்கைகள் நடத்தப்படுகின்றன.ஒருங்கிணைந்த தீவு மேலாண்மைத் திட்டம் பவளப்பாறைகளுக்கு பாதுகாப்பு அளிக்கிறது.நீண்ட கால பவளப்பாறை கண்காணிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனம் பவளப்பாறை வெளுப்பின் அளவு குறித்து ஆய்வு நடத்துகிறதுஹைதராபாத்தில் உள்ள இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம், 2011-ம் ஆண்டு முதல் இந்திய பவள சூழலுக்கான கடல் மேற்பரப்பு வெப்பநிலை தரவுகளின் அடிப்படையில், பவளப் பாறைகளை  வெளுக்கும் தகவல் சேவைகளை வழங்கியுள்ளது.

மத்திய அரசு பல்வேறு ஒழுங்குமுறை மற்றும் ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மூலம் நாட்டில் உள்ள பவளப்பாறைகளைப் பாதுகாக்க நடவடிக்கை  எடுத்துள்ளது:

பவளப்பாறைகளுக்கு மிக உயர்ந்த பாதுகாப்பை வழங்கும் இந்திய வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972-ன் கீழ் அட்டவணை-I இன் கீழ் பவளப்பாறை இனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பவளப்பாறைகளை வெளுத்தல் என்பது இந்தியாவில் அவ்வப்போது நிகழும் நிகழ்வாகும், மேலும் இதுபோன்ற சம்பவங்கள் சுற்றுலா மற்றும் மீனவர்கள் போன்ற உள்ளூர் பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.

இந்தத் தகவலை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு. கீர்த்தி வர்தன் சிங் மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.

*****

 (Release ID: 2041457)

IR/KV/KR


(Release ID: 2041688) Visitor Counter : 65


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP