உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மஹாராஷ்டிராவில் உள்ள இந்திய உணவுக் கழகம் திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ் அரிசி விற்பனை செய்கிறது

Posted On: 05 AUG 2024 2:39PM by PIB Chennai

இந்திய உணவுக் கழகத்தின் மகாராஷ்டிர பிராந்திய அலுவலகம் 2024 ஆகஸ்ட் முதல் உள்நாட்டு திறந்த சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் அரிசியை விற்பனைக்கு வழங்குகிறது.

அரிசியை மொத்தமாக வாங்க விரும்புவோர் இந்திய உணவுக் கழகத்தின் ஏல சேவை அமைப்பின் https://www.valuejunction.in/fci/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து ஏலம் எடுக்கலாம். தங்களின் பெயர்களை பதிவு செய்ய விரும்பும் எவரும் 72 மணி நேரத்திற்குள் பதிவு செய்யும் நடைமுறையை  பூர்த்தி செய்யலாம்.

07.08.2024 அன்று நடைபெறவுள்ள ஏலத்திற்கு கோவா மாநிலம் உட்பட மகாராஷ்டிரா பிராந்தியத்திற்கு மொத்தம் 20,000 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்பட்டுள்ளது.  இந்த ஏலத்தில் வர்த்தகர்கள், மொத்தமாக வாங்குவோர் பங்கு பெறலாம். ஏலத்தின் குறைந்தபட்ச அளவு 10 மெட்ரிக் டன்னாகவும், அதிகபட்ச அளவு 1000 மெட்ரிக் டன்னாகவும் இருக்கும். இந்த நடைமுறை அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்தி சாமான்ய மக்களுக்கு நிவாரணம் அளிக்க உதவும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2041565

***

SMB/AG/KR




(Release ID: 2041676) Visitor Counter : 28


Read this release in: English , Marathi