சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

NAFCC இன் கீழ் திட்டங்களின் நிலை

प्रविष्टि तिथि: 05 AUG 2024 12:17PM by PIB Chennai

பருவநிலை மாற்றத்தின் பாதகமான விளைவுகளால் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆதரவு நடவடிக்கைகளை ஆதரிப்பதற்காக பருவநிலை மாற்றத்திற்கான தேசிய ஆதரவு நிதி ஏற்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் ஆந்திரப் பிரதேசம் உட்பட 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ரூ. 847.48 கோடி திட்ட மதிப்பீட்டில் 30 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தேசிய வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபார்டு) இதை செயல்படுத்தும் நிறுவனமாக உள்ளது.

NAFCC இன் கீழ் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. இருப்பினும், "ஆந்திரப் பிரதேசத்தில் கடலோர மற்றும் வறண்ட பகுதிகளில் பால் துறையில் பருவநிலை நெகிழ்திறன் தலையீடுகள்" என்ற தலைப்பிலான NAFCC திட்டத்திற்கு ஆகஸ்ட் 2016-ல் ஒப்புதல் அளிக்கப்பட்டு, ஆந்திரப் பிரதேசத்தில் 03 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. அனந்தபுரமு (அனந்தபூர்), ஸ்ரீ பொட்டி ஸ்ரீராமுலு நெல்லூர் (நெல்லூர்) மற்றும் விஜியநகரம் (விஜயநகரம்). கறவை மாடுகளுக்கு ஏற்படும் வெப்ப பாதிப்பு மற்றும் புயலினால் ஏற்படும் தாக்கங்களை எதிர்கொள்ள சமுதாய அடிப்படையிலான சிறந்த நடைமுறைகளை நிறுவுவது இத்திட்டத்தின் ஒரு அம்சமாகும்

இந்தத் தகவலை சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு. கீர்த்தி வர்தன் சிங் மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.

*****

(Release ID: 2041460)

IR/KV/KR


(रिलीज़ आईडी: 2041635) आगंतुक पटल : 84
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP