ஊரக வளர்ச்சி அமைச்சகம்
லட்சாதிபதி சகோதரிகள் திட்டத்தை செயல்படுத்துதல்
प्रविष्टि तिथि:
02 AUG 2024 5:54PM by PIB Chennai
லட்சாதிபதி சகோதரிகள் என்பது கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் (MoRD) தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா - தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் திட்டத்தின் வெளிப்பாடாகும். தீன்தயாள் அந்தியோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 30ஜூன் 2024 நிலவரப்படி, 10.05 கோடி பெண்கள் 90.86 லட்சம் சுய உதவிக் குழுக்களில் உள்ளவர்கள் இந்த சுய உதவிக் குழு உறுப்பினர்களில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட சுய உதவிக் குழு உறுப்பினர்கள் ஆண்டு வருமானம் ரூ.1லட்சத்திற்கு மேல் பெறுகின்றனர்.
2024-25-ம் நிதியாண்டில் தீன்தயாள் அந்தியோதயா யோஜனா - தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்திற்கு ரூ.15047.00 கோடி கூடுதல் ஒதுக்கீட்டை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. இதன் மூலம் சுய உதவிக் குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரத்திற்கான திட்டங்கள் அதிகரிக்கப்படும். இத்தகைய செயல்பாடுகள், சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு பொருளாதார ரீதியாக அதிகாரம் அளிப்பது மட்டுமின்றி, மகளிர் தலைமையிலான வளர்ச்சிக்கும் வழிவகை செய்யும்.
தீன்தயாள் அந்தியோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் பல்வேறு துணைத் திட்டங்களின் கீழ் சுய உதவிக் குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரம் பன்முகப்படுத்தப்பட்டு ஆழப்படுத்தப்படும். தீன்தயாள் அந்தியோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிருக்கு அதிகாரம் அளிக்க கடன் மற்றும் சிறுகடன் வசதிகளை பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் வழங்குகிறது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் டாக்டர் சந்திரசேகர் பெம்மசானி இத்தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2040878
***
PLM/RS/DL
(रिलीज़ आईडी: 2041025)
आगंतुक पटल : 174