ஜவுளித்துறை அமைச்சகம்
ஜவுளித் துறையில் ஏற்றுமதி, உற்பத்தி, வேலைவாய்ப்பை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது
Posted On:
02 AUG 2024 5:20PM by PIB Chennai
ஜவுளித் துறையில் ஏற்றுமதி, உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்க 2019-ம் ஆண்டு முதல் அரசு பல்வேறு முன்முயற்சிகள் / நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சில முக்கிய முயற்சிகள் பின்வருமாறு:
2027-28 வரையிலான ஏழு ஆண்டு காலத்திற்கு ரூ.4,445 கோடி மதிப்பீட்டில் ஏழு மெகா ஒருங்கிணைந்த ஜவுளிப் பகுதி மற்றும் ஆடை இந்த பூங்காக்களை அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு, தெலுங்கானா, குஜராத், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் PM MITRA பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன.
நாட்டில் எம். எம். எஃப் ஆயத்த ஆடைகள், எம். எம். எஃப் ஃபேப்ரிக்ஸ் மற்றும் தொழில்நுட்ப ஜவுளித் தயாரிப்புகளின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, ஜவுளித் துறைக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை (பி.எல்.ஐ) திட்டத்தை ரூ.10,683 கோடி ஒதுக்கீட்டுடன் அரசு செயல்படுத்தி வருகிறது. பிஎல்ஐ திட்டத்தின் கீழ் 73 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
ஜவுளித் துறையை சர்வதேச சந்தையில் போட்டியிட வைக்கும் வகையில், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதிக்கு மாநில மற்றும் மத்திய வரிகள் தள்ளுபடி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தொழில்நுட்ப ஜவுளித் துறையில் நவீன ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்காக அரசு 1,480 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதுவரை 137 ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது, அவற்றில் 49 திட்டங்கள் 2023-24 ஆம் ஆண்டில் அனுமதிக்கப்பட்டுள்ளன.
சமர்த் திட்டத்தின் கீழ் இதுவரை 3.27 லட்சம் பயனாளிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது, இதில் 1.33 லட்சம் பயனாளிகள் 2023-24 ஆம் ஆண்டில் திறன் பயிற்சி பெற்றுள்ளனர்.
பட்டு வளர்ச்சித் தொழிலின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக 19.01.2022 முதல் பட்டு சமக்ரா-2 செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தேசிய கைத்தறி வளர்ச்சித் திட்டத்தின் கீழ், தகுதி வாய்ந்த கைத்தறி முகவர் / நெசவாளர்களுக்கு மூலப்பொருட்கள் வாங்குதல், மேம்படுத்தப்பட்ட தறிகள் மற்றும் உபகரணங்கள் கொள்முதல், சூரிய ஒளி விளக்குகள் அலகுகள், தறிக்கூடம் கட்டுதல், திறன் வளர்ப்பு, தயாரிப்பு மற்றும் வடிவமைப்பு மேம்பாடு, தொழில்நுட்ப மற்றும் பொது உள்கட்டமைப்பு வசதிகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் கைத்தறி பொருட்களை விற்பனை செய்தல், நெசவாளர் முத்ரா திட்டத்தின் கீழ் சலுகைக் கடன், கல்வி உதவித்தொகை மற்றும் சமூகப் பாதுகாப்பு போன்றவற்றிற்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.
மூலப்பொருள் வழங்கும் திட்டத்தின் கீழ் தரமான நூல் மற்றும் அதன் கலவைகள் தகுதி வாய்ந்த கைத்தறி நெசவாளர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் 2023-2024 நிதியாண்டில் மொத்தம் 340 லட்சம் கிலோ நூல் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய கைத்திறத் தொழில்கள் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் விரிவான கைத்திறப் பொருட்கள் குழும மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கைவினைஞர்களுக்கு சந்தை வாய்ப்பு, வடிவமைப்பு திட்டம், பயிற்சித் திட்டங்கள், குழும மேம்பாடு, கைவினைஞர்களுக்கு நேரடி பயன், உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ஆதரவு மற்றும் அம்பேத்கர் ஹஸ்சில்ப் விகாஸ் யோஜனா மூலம் உதவி மூலம் கைவினைஞர்களுக்கு ஆதரவு அளிக்கப்படுகிறது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் திரு. பபித்ரா மார்கெரிட்டா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2040834
***
PLM/RS/DL
(Release ID: 2041010)
Visitor Counter : 45