மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் நிதியுதவி திட்டத்தின் கீழ் உள்நாட்டு சுகாதார தொழில்நுட்பங்களை தொழில்துறைக்கு மாற்றியது ஐஐடி தில்லி

Posted On: 01 AUG 2024 1:47PM by PIB Chennai

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) நிதியுதவி திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்ட இரண்டு உள்நாட்டு சுகாதார தொழில்நுட்பங்கள், ஆராய்ச்சி மற்றும் பயன்பாடுகளுக்கான நானோ எலக்ட்ரானிக்ஸ் நெட்வொர்க் (NNetRA) 31ஜூலை2024 அன்று இந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லி நடத்திய நிகழ்வில் தொழில்துறைக்கு மாற்றப்பட்டன.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் திரு எஸ் கிருஷ்ணன், கூடுதல் செயலாளர் திரு புவனேஷ் குமார்,  முதுநிலை இயக்குநர் திருமதி சுனிதா வர்மா, தில்லி ஐஐடி இயக்குநர் பேராசிரியர் ரங்கன் பானர்ஜி மற்றும் பேராசிரியர் நீரஜ் காரே, டாக்டர் சங்கீதா செம்வால், உள்ளிட்டோர் முன்னிலையில் இந்தத் தொழில்நுட்ப பரிமாற்ற விழா நடந்தது. தில்லி ஐஐடி-ல் உள்ள கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான அறக்கட்டளை (FITT) இந்த தொழில்நுட்ப பரிமாற்றத்தை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது.

புரோஸ்டேட் புற்றுநோயைக் கண்டறிவதற்கான டி.என்.ஏ ஆப்டமர் என்று பெயரிடப்பட்ட தொழில்நுட்பம், டாக்டர் ஸ்வப்னில் சின்ஹா, ஹம்சா பயோடெக் பிரைவேட் லிமிடெட், கொல்கத்தா, இந்தியாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த ஆப்டாமர் கருவி ஐ.ஐ.டி டெல்லியைச் சேர்ந்த பேராசிரியர் பிரசாந்த் மிஸ்ரா மற்றும் குழுவினரால் உருவாக்கப்பட்டது என்பதோடு இது குறிப்பிட்ட புற்றுநோய்களுடன் பிணைக்கும் திறன் கொண்டது மற்றும்புரோஸ்டேட் புற்றுநோய்க்கான அஸ் தெரனோஸ்டிக்ஸாக பயன்படும்.

நோய்க்கிருமிகளைக் கண்டறிவதற்கான ஃபோட்டானிக் சிப் அடிப்படையிலான ஸ்பெக்ட்ரோமெட்ரிக் பயோசென்சார் தொழில்நுட்பம், திரு. நிதின் ஜவேரி, யுனினோ ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட், மும்பை, இந்தியா நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பம், ஐ.ஐ.டி டெல்லியைச் சேர்ந்த பேராசிரியர் ஜோபி ஜோசப் மற்றும் குழுவினரால் உருவாக்கப்பட்டுள்ளது, மேலும் இது, நோய்க்கிருமிகளை விரைவாகவும் துல்லியமாகவும் கண்டறிய உதவும், இதன் மூலம்தொற்று நோய்களைத் தடுக்க உதவும்.

இந்த தொழில்நுட்பங்களை வெற்றிகரமாக மாற்றியதற்காக அணிகளை வாழ்த்திய  மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்  நுட்பத்துறை செயலாளர், இந்த தொழில்நுட்ப பரிமாற்றம் புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நிலையான வளர்ச்சியை தொடர்ந்து இயக்கக் கூடிய எதிர்காலத்தை உருவாக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இந்த தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக ஏற்றுக்கொள்வது, செயல்படுத்துவது மற்றும் வணிகமயமாக்குவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் .

----

MM/KPG/DL



(Release ID: 2040481) Visitor Counter : 37