குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் வணிகர்களை ஊக்குவித்தல்

இடுகை இடப்பட்ட நாள்: 01 AUG 2024 5:01PM by PIB Chennai

2021, ஜூலை 2 முதல் சில்லறை மற்றும் மொத்த வணிகர்களை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தராக அரசு சேர்த்தது. கடன் பெறுவதற்காக அவர்கள் உத்யம் பதிவு தளத்தில் பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

2024 நிலவரப்படி, 2,19,38,707 வர்த்தகர்கள் உத்யம் பதிவு தளத்தில் பதிவு செய்துள்ளனர்.  நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க, குறிப்பாக கொவிட் -19 தொற்றுநோய் பரவல் காலங்களின் போது தற்சார்பு பாரத திட்டத்தின் கீழ், அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது.  குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடி சார்புநிலைக் கடன், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உட்பட வணிகங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி பிணையம் இல்லாத தானியங்கிக் கடன்கள், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு சுயசார்பு இந்தியா நிதி மூலம் ரூ.50,000 கோடி பங்கு உட்செலுத்துதல், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வகைப்பாட்டில் திருத்தப்பட்ட அளவுகோல்கள். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் எளிதாக வர்த்தகம் செய்வதற்காக 'உத்யம் பதிவு' மூலம் புதிய பதிவு செய்தல், ரூ.200 கோடி வரையிலான கொள்முதலுக்கு உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கிடையாது போன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.

 இத்தகவலை மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்நிறுவனங்கள் துறை இணையமைச்சர் திருமதி ஷோபா கரந்தலாஜே  மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனை தெரிவித்தார்.
 

------------

IR/RS/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2040478) வருகையாளர் எண்ணிக்கை : 97
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Hindi_MP , Kannada