புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி
प्रविष्टि तिथि:
24 JUL 2024 7:00PM by PIB Chennai
தமிழ்நாடு உட்பட நாட்டின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் புதிய - புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் கீழ் நிதி, தொழில்நுட்ப, திறன் மேம்பாட்டு உதவிகளை மத்திய அரசு வழங்குகிறது.
சூரிய சக்தி வீடுகள் திட்டத்தை மத்திய அரசு 13.02.2024 அன்று அறிமுகப்படுத்தியது. அரசுக் கட்டடங்களின் மேற்கூரையின் மேல் சூரிய ஒளி மின்சக்தி அமைப்பை ஏற்படுத்துவது இதன் அம்சங்களில் ஒன்றாகும். 03.07.2024 அன்று வெளியிடப்பட்ட செயல்பாட்டு வழிகாட்டுதல்கள், இத்திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அளவில் உள்ள அரசுக் கட்டடங்களின் செறிவூட்டலை உறுதி செய்வதில் பல்வேறு தரப்பினரின் பங்கை வரையறுத்துள்ளன.
தமிழ்நாடு மின் உற்பத்தி - பகிர்மானக் கழகம், தெரிவித்துள்ளபடி, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கட்டடங்களில் மேற்கூரை சூரிய சக்தி அமைப்பை நிறுவி சூரிய மின்சக்தி மயமாக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த முயற்சி குறிப்பாக அரசு அலுவலகங்கள், நீதிமன்ற வளாகங்கள், அரசு நடத்தும் தொழில்துறை பிரிவுகள், கல்வி நிறுவனங்களில் செயல்படுத்தப்படுகிறது.
மத்திய மின்சார ஆணையத்திடமிருந்து பெறப்பட்ட தகவலின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளிலும் நடப்பு ஆண்டிலும் தமிழ்நாட்டின் மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் உற்பத்தி பின்வருமாறு:
*2019-20 - 24.53 பில்லியன் யூனிட்
*2020-21 - 26.87 பில்லியன் யூனிட்
*2021-22 - 29.27 பில்லியன் யூனிட்
* 2022-23 - 33.59 பில்லியன் யூனிட்
*2023-24 - 33.17 பில்லியன் யூனிட்
*2024-25 (மே வரை) - 4.62 பில்லியன் யூனிட்
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் புதிய - புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு பிரல்ஹத் ஜோஷி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
****
(रिलीज़ आईडी: 2040419)
आगंतुक पटल : 74