வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
வீடற்றவர்களுக்கானத் திட்டம்
Posted On:
01 AUG 2024 1:14PM by PIB Chennai
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டின் மொத்த நகர்ப்புற வீடற்றவர்களின் மக்கள் தொகை 9,38,348 ஆகும். இந்திய அரசியலமைப்பின் 7-வது அட்டவணையின்படி, நிலம், மாநிலப் பட்டியலில் உள்ளது. எனவே, வீடற்ற நபர்களுக்கு மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை எடுப்பது மற்றும் திட்டங்களை வகுப்பது மாநிலங்கள்/யூனியன் பிரதேச அரசுகளின் முதன்மைப் பொறுப்பாகும். மாநில அரசுகள்/யூனியன் பிரதேசங்களின் முயற்சிகளுக்கு மத்திய அரசு திட்டங்கள் மூலம் வருகிறது. தீன்தயாள் அந்தியோதயா திட்டம் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ், நகர்ப்புற வீடற்றவர்களுக்கான தங்குமிடங்களை அந்தந்த மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மூலம் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் நிர்வகிக்கிறது. நகர்ப்புற வீடற்றவர்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய நிரந்தர தங்குமிடங்களை வழங்குவதில் இது கவனம் செலுத்துகிறது. சமூகப் பாதுகாப்பு, உணவு, கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புகள், வீடற்ற குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதற்கான ஏற்பாடு, திறன் பயிற்சி போன்றவற்றை ஒருங்கிணைக்கிறது. கூடுதலாக, தகுதியான நகர்ப்புற குடும்பங்களின் வீட்டுவசதித் தேவையை பூர்த்தி செய்வதற்காக மாநிலங்கள்/யூனியன் பிரதேச அரசுளுக்கு உதவுவதற்காக பிரதமரின் வீட்டு வசதித்திட்டம் -நகர்ப்புறத் திட்டத்தையும், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் செயல்படுத்துகிறது. தகுதியுள்ள அனைத்து பருவ நிலைக்கும் ஏற்ற வீடுகளையும் வழங்க பி. எம். ஏ. ஒய்-யு திட்டமிட்டுள்ளது.
இந்த தகவலை மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் இணை அமைச்சர் திரு டோகான் சாஹு தெரிவித்தார்.
---------
Release ID: 2040044)
IR/RS/KR
(Release ID: 2040138)
Visitor Counter : 62