மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
புதிய கல்வி முறையுடன் ஒருங்கிணைக்கப்படும் தொழில்நுட்பம்
प्रविष्टि तिथि:
31 JUL 2024 7:03PM by PIB Chennai
புதிய கல்விக் கொள்கை 2020-ல் தொழில்நுட்பத்தை கல்வியுடன் இணைக்க வலுவாக வலியுறுத்தப்பட்டிருப்பதன் அடிப்படையில், நாட்டின் பன்முக மொழி பாரம்பரியத்தை பாதுகாத்து ஊக்குவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய கல்வித்துறை இணையமைச்சர் டாக்டர் சுகந்த மஜூம்தார் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்துள்ள அவர், பல்வேறு புத்தகங்களை பட்டியலிடப்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்க ஏதுவாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகம், பாஷா சங்கம் நிகழ்ச்சிகளையும், இயந்திர மொழி பெயர்ப்பு பிரிவையும் செயல்படுத்தி வருவதாக கூறியுள்ளார்.
குறிப்பாக பொறியியல் பாடப் புத்தகங்கள் உட்பட இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான புத்தகங்களை பல்வேறு இந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பதற்காக அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் (ஏஐசிடிஇ) மற்றும் பல்கலைக்கழக மானிய குழு ஆகியவை அனுவதினி என்ற செயலியை உருவாக்கியிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுபோன்று மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்கள் e-KUMBH இணையதளத்தில் கிடைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். நீட், ஜேஇஇ, பல்கலைக்கழக பொது நுழைவு தேர்வு போன்ற தேர்வுகள் 13 மொழிகளில் நடத்தப்படுவதுடன் ஏஐசிடிஇ நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் பொறியியல் பாடங்கள் 8 மொழிகளில் கற்பிக்கப்படுவதாகவும் டாக்டர் சுகந்த மஜூம்தார் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2039811
***
MM/AG/DL
(रिलीज़ आईडी: 2039886)
आगंतुक पटल : 102