புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

புவிவெப்ப எரிசக்தித் திட்டங்கள்

Posted On: 24 JUL 2024 7:02PM by PIB Chennai

இந்தியாவில் புவிவெப்ப எரிசக்தி வளர்ச்சியின் தற்போதைய நிலையும் விவரங்களும் வருமாறு:-

இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் (ஜிஎஸ்ஐ) பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட புவிவெப்ப இடங்களில் புவிவெப்ப எரிசக்தி தொடர்பான ஆய்வை மேற்கொண்டுள்ளது.

இதில் வெப்பநிலை, வெப்ப வெளியேற்றம், பல்வேறு புவிவெப்ப இடங்களில் நீரின் தரம், வேதியியல் தன்மை பற்றிய தரவு சேகரிப்பு ஆகியவை அடங்கும். ஜிஎஸ்ஐ, இந்தியா முழுவதும் 381 வெப்ப பகுதிகளை ஆய்வு செய்து 'ஜியோதெர்மல் அட்லஸ் ஆஃப் இந்தியா - 2022' என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. நாட்டில் சுமார் 10,600 மெகாவாட் புவிவெப்ப மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கரேனி கோலியரீஸ் கம்பெனி லிமிடெட் (எஸ்சிசிஎல்) தெலுங்கானாவின் பத்ராத்ரி கோத்தகுடெம் மாவட்டத்தின் மனுகுரு பகுதியில் 20 கிலோவாட் புவிவெப்ப மின் நிலையத்தை அமைத்துள்ளது.

புதிய - புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழில்துறையினர் மூலம் உள்நாட்டு தொழில்நுட்பங்களையும் உற்பத்தியையும் மேம்படுத்துவதற்காக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆராய்ச்சி - தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்தியாவில் புவிவெப்ப எரிசக்தி முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதற்காக புகழ்பெற்ற சர்வதேச அமைப்புகளுடனும் நாடுகளுடனும் பின் வரும் ஒத்துழைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன:

*இந்தியா - ஐஸ்லாந்து இடையே 2007 அக்டோபர் 9 அன்று கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், இரு தரப்பினரும் புவிவெப்ப மண்டலத்தை ஒத்துழைப்புக்கான பகுதியாக அடையாளம் கண்டுள்ளனர்.

*சவுதி அரேபிய அரசுடன் 2019 அக்டோபர் 29 அன்று இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. இதன்படி புவிவெப்ப மண்டலங்கள் ஒத்துழைப்புக்கான பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

*இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் 2023 ஆகஸ்ட் 29 அன்று தொடங்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்ப செயல் தளத்தின் கீழ், புவிவெப்பம் ஒரு முக்கிய பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு பிரல்ஹத் ஜோஷி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

****

PLM/DL



(Release ID: 2039855) Visitor Counter : 30


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP