மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பால் உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு திட்டம்

प्रविष्टि तिथि: 31 JUL 2024 5:24PM by PIB Chennai

நாட்டில் உள்நாட்டு மாட்டு இனங்களை பாதுகாத்து, பால் உற்பத்தியை அதிகரிக்க தேசிய கோகுல் இயக்கம் என்ற பெயரில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக, மத்திய மீன் வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம்  பதிலளித்துள்ள அவர், கோகுல் இயக்கத்தின் கீழ், மாவட்ட அளவில் 50 சதவீதத்திற்கும் குறைவான செயற்கை கருவூட்டல் மேற்கொள்ளப்படும் மாவட்டங்களுக்கென தேசிய அளவிலான செயற்கை கருவூட்டல் திட்டம் செயல்படுத்தப்படுவதாக கூறியுள்ளார்.  குழாய் வழி செயற்கை கருவுறுதல்   மூலம் மாட்டு இனங்களின் விரைவுபடுத்தப்பட்ட இனப்பெருக்கத் திட்டம், பசு மாட்டு கன்றுகளை  அதிக அளவில் உற்பத்தி செய்வதற்கான மேம்பட்ட இனப்பெருக்கத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தியாவின் கிராமப்புறங்களில் பன்னோக்கு செயற்கை கருவுறுதல் தொழில்நுட்ப பணியாளர்கள் மூலம் விவசாயிகளின் வீடுகளுக்கே சென்று தரமான செயற்கை கருவுறுதல் சேவை வழங்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்   https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2039704              

***

MM/AG/KR/DL


(रिलीज़ आईडी: 2039830) आगंतुक पटल : 93
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Hindi_MP