சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மாற்றுத்திறனாளிகள் உபகரணங்கள் வாங்கவும், பொருத்துவதற்குமான உதவித் திட்டம்
प्रविष्टि तिथि:
31 JUL 2024 3:06PM by PIB Chennai
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வாங்கவும் பொருத்துவதற்குமான உதவித் திட்ட முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள மத்தியப் பொதுத்துறை நிறுவனமான செயற்கை அவயங்கள் உற்பத்திக் கழகம் மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் அளிக்கும் திட்டத்தை அமல்படுத்துவதற்கான முக்கிய நிறுவனமாகும். மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்க 100 முன்னோடி பகுதிகளில் முகாம்களை நடத்துவதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளித்தல் துறை அறிவுறுத்தியுள்ளது. 22.07.2024 வரை 82 பகுதிகளில் முகாம்கள் மூலம் 11,189 மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
------
IR/KPG/DL
(रिलीज़ आईडी: 2039823)
आगंतुक पटल : 109