கூட்டுறவு அமைச்சகம்
இந்திய விதை கூட்டுறவு சங்கம்
Posted On:
31 JUL 2024 3:20PM by PIB Chennai
மத்திய கூட்டுறவு அமைச்சகம், பன் மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டம் 2002-ன் கீழ், இந்திய விதை கூட்டுறவு சங்க நிறுவனத்தை அமைத்துள்ளது. இந்த கூட்டுறவு சங்கம், இஃப்கோ, கிரிப்கோ, நாஃபெட், தேசிய பால்பண்ணை மேம்பாட்டு வாரியம், தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 5 நிறுவனங்களும் தலா 50 கோடி ரூபாய் பங்களிப்புடன் 250 கோடி ரூபாய் பூர்வாங்க முதலீடாக இந்த நிறுவனத்திற்கு வழங்கியுள்ளன. இதன் அதிகாரபூர்வ பங்கு மூலதனம் ரூ.500 கோடியாகும்.
இந்த கூட்டுறவு சங்கம், தரமான விதைகளை உற்பத்தி செய்வதுடன் கொள்முதல் மற்றும் விநியோகத்தையும் மேற்கொண்டுள்ளது. உள்நாட்டு இயற்கை விதைகளை மேம்படுத்துவதும், அதனை பாதுகாப்பதும் அதன் நோக்கமாகும்.
இந்தச் சங்கம், உற்பத்தி, பரிசோதனை, சான்றளிப்பு, கொள்முதல், பதப்படுத்துதல், சேமித்து வைத்தல், முத்திரை இடுதல், பெட்டிகளில் அடைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்கிறது. இந்த விதைகள் பொதுத்துறை ஆராய்ச்சி அமைப்புகள், சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள் மூலம் வாங்கப்படுகின்றன.
இந்தியாவில் தரமான விதைகளை உற்பத்தி செய்வதை அதிகரிக்க இந்த கூட்டுறவு சங்கம் உதவும். இதன் மூலம் வெளிநாட்டிலிருந்து விதைகளை இறக்குமதி செய்வது குறைக்கப்படும். மேலும் இதன் மூலம் வேளாண்மை உற்பத்தி அதிகரிக்கப்படுவதுடன், மே இன் இந்தியா இயக்கத்தை ஊக்குவித்து கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். இதனால் தற்சார்பு இந்தியாவை உருவாக்க வகை செய்யப்படும்.
மாநிலங்களவையில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் திரு அமித் ஷா கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2039581
***
PKV/RR/KR/DL
(Release ID: 2039818)
Visitor Counter : 42