மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
உள்நாட்டிலேயே செமிகண்டக்டர் உற்பத்தி ஊக்குவிப்பு
Posted On:
31 JUL 2024 4:22PM by PIB Chennai
இந்தியாவின் செமிகண்டக்டர் உற்பத்தி சந்தை 2030-ம் ஆண்டுக்குள் 109 பில்லியன் டாலரை எட்டும் என தொழில்துறை மதிப்பீடுகள் தெரிவிப்பதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா தெரிவித்துள்ளார்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்துள்ள அவர், 2023-ம் ஆண்டில் மட்டும் 38 பில்லியன் டாலர் அளவுக்கு செமிகண்டக்டர்கள் உற்பத்தி செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். நாட்டில் செமிகண்டக்டர் உற்பத்தியை மேம்படுத்தவும், உற்பத்தி சூழலை வெளிப்படுத்தவும் ரூ. 76,000 கோடி மதிப்பிலான செமிகான் இந்தியா திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். செமிகண்டக்டர் உற்பத்தி தொழிலில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கும், உற்பத்தி மற்றும் வடிவமைப்பு சூழலியலை வெளிப்படுத்தும் நிறுவனங்களுக்கும் நிதியுதவி அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மொஹாலியில் உள்ள செமிகண்டக்டர் பரிசோதனை கூடத்தை நவீனப்படுத்தவும் மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதாக குறிப்பிட்ட திரு ஜிதின் பிரசாதா, இந்தியாவை செமி கண்டக்டர் திறன் பெற்ற நாடாக மாற்றவும் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2039638
***
MM/AG/KR/DL
(Release ID: 2039790)
Visitor Counter : 72