மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
நீடித்த மீன் வளர்ப்பு தொழில்
Posted On:
31 JUL 2024 4:38PM by PIB Chennai
நாட்டின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு உட்பட்ட கடலோரப் பகுதிகளில் ஆண்டுக்கு 5.31 மில்லியன் டன் அளவிற்கு மீன் உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மத்திய மீன் வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்துள்ள அவர், கடந்த 2022-23-ம் ஆண்டில் அதிகபட்சமாக 4.43 மில்லியன் டன் அளவிற்கு மீன் வகைகள் உற்பத்தி செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
கடற்கரையில் இருந்து 12 கடல் மைல் வரையிலான கடல் எல்லைக்குள் மீன் வளர்ப்பு மற்றும் மீன்பிடிப்பது மாநில பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக கூறியுள்ளார். இதன் அடிப்படையில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான தேசிய கொள்கை 2017 மத்திய அரசு வெளியிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பருவமழைக் காலங்களில் 61 நாள் மீன் பிடி தடைகாலம் அமல்படுத்துதல் உள்ளிட்ட நீடித்த மீன் வளர்ப்பு முயற்சிகளை உறுதி செய்வதன் வாயிலாக மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் கூறியுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2039653
***
MM/AG/KR/DL
(Release ID: 2039776)