வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
வர்த்தகம், ஏற்றுமதி, உற்பத்தி ஆகியவற்றை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது
Posted On:
30 JUL 2024 5:05PM by PIB Chennai
ஏற்றுமதியை அதிகரிக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும், எளிதாக வர்த்தகம் செய்வதை ஊக்குவிக்கவும் மத்திய அரசு பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
*புதிய வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை 1 ஏப்ரல் 2023 முதல் நடைமுறைக்கு வந்தது.
*ஏற்றுமதிக்கு முந்தைய, பிந்தைய ரூபாய் ஏற்றுமதிக் கடனுக்கான வட்டி சமநிலைத் திட்டம் 31-08-2024 வரை மொத்தம் ரூ.12,788 கோடி ஒதுக்கீட்டுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது.
*ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கு ஏற்றுமதிக்கான வர்த்தக உள்கட்டமைப்பு திட்டம் (TIES), சந்தை அணுகல் முயற்சித் (MAI) திட்டம் போன்ற பல திட்டங்கள் மூலம் உதவி வழங்கப்படுகிறது.
*தொழிலாளர் சார்ந்த துறைகளின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக மாநில, மத்திய வரிகள் தள்ளுபடி (RoSCTL) திட்டம் 07.03.2019 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
*ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் மீதான தீர்வைகள் மற்றும் வரிகளைக் குறைக்கும் (RoDTEP) திட்டம் 01.01.2021 முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது.
*ஏற்றுமதியாளர்களின் தடையற்ற வர்த்தக பயன்பாட்டை அதிகரிப்பதற்கும் வர்த்தகத்தை எளிதாக்குவதற்கும் மூலச் சான்றிதழுக்கான பொதுவான டிஜிட்டல் தளம் தொடங்கப்பட்டுள்ளது.
*ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்றுமதி வாய்ப்புள்ள பொருட்களை அடையாளம் கண்டு, இந்த தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதில் உள்ள தடைகளை நிவர்த்தி செய்வதன் மூலமும், மாவட்டத்தில் வேலைவாய்ப்பை உருவாக்க உள்ளூர் ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்களுக்கு ஆதரவளிப்பதன் மூலமும் மாவட்டங்களை ஏற்றுமதி மையங்களாக மாற்றும் நடவடிக்கை மேறகொள்ளப்பட்டுள்ளது.
*இந்தியாவின் வர்த்தகம், சுற்றுலா, தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு இலக்குகளை மேம்படுத்துவதில் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களின் தீவிர பங்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. ய
*இந்தியாவில் உள்நாட்டு வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சரக்கு - சேவை வரி அறிமுகம், கார்ப்பரேட் வரி குறைப்பு, எளிதாக வர்த்தகம் செய்வதை மேம்படுத்துதல், அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கை சீர்திருத்தங்கள், இணக்கச் சுமையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள், பொது கொள்முதல் ஆணைகள் மூலம் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள், படிப்படியான உற்பத்தித் திட்டம், தரக் கட்டுப்பாட்டு ஆணைகள் ஆகியவை இதில் அடங்கும்.
*ஏற்றுமதியை மேம்படுத்துவதற்காக 14 முக்கிய துறைகளுக்கு உற்பத்தியுடன் கூடிய ஊக்கத் தொகைத் திட்டங்கள் ரூ. 1.97 லட்சம் கோடி செலவில் அறிவிக்கப்பட்டுள்ளன.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வர்த்தகம் - தொழில்துறை இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
(Release ID: 2039594)