பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

முன்னாள் ராணுவ வீரர்களின் நலனுக்கான இ-சேஹத் தொலை மருத்துவ ஆலோசனைத் திட்டத்தை ராணுவம் தொடங்கியுள்ளது

Posted On: 30 JUL 2024 6:12PM by PIB Chennai

முன்னாள் படைவீரர்களுக்கு இ-சேஹத் (E-SeHAT) என்ற தொலை மருத்துவ ஆலோசனைத் திட்டத்தை 30 ஜூலை 2024 அன்று ராணுவம் அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னாள் படை வீரர்கள் பங்களிப்பு சுகாதாரத் திட்டமான இசிஹெச்எஸ் திட்டப் பயனாளிகள், மருத்துவமனைக்கு செல்லாமலேயே தங்கள் வீடுகளிலிருந்தபடியே மருத்துவ சிகிச்சைக்காக தொலைபேசி மூலம் ஆலோசனை பெற இந்த மின்னணு சேவைத் திட்டம் உதவும்.

பாதுகாப்பான, கட்டமைக்கப்பட்ட வீடியோ அடிப்படையிலான மருத்துவ ஆலோசனைகள் மூலம் சுகாதார சேவைகளை வழங்குவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. பாரமுல்லா, இம்பால், சூரசந்த்பூர், திமாபூர், அய்ஜாவால் ஆகிய தொலைதூர இடங்கள் உள்ளிட்ட 12 முன்னாள் படை வீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டத்தில் இது தொடங்கப்பட்டுள்ளது.

 

மார்ச் 2020-ல் நித்தி ஆயோக்குடன் கலந்தாலோசித்து சுகாதார - குடும்ப நல அமைச்சகம் வழங்கிய தொலை மருத்துவ நடைமுறை வழிகாட்டுதல்களை இந்த திட்டம் பின்பற்றுகிறது. இத்திட்டத்தை தடையின்றி செயல்படுத்தவும், விரிவாக்கம் செய்யவும் தகவல் தொழில்நுட்ப வன்பொருள் உபகரணங்கள் 427 ஒருங்கிணைந்த  மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இணையதளம் மூலம் மருத்துவ ஆலோசனை வழங்க பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

 

***

 


(Release ID: 2039576) Visitor Counter : 45


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP