சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
2024-25 ஆம் ஆண்டிற்கான பொதுக் கணக்குக் குழு மற்றும் பொது நிறுவனங்கள் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி
प्रविष्टि तिथि:
31 JUL 2024 12:09PM by PIB Chennai
தமிழ்நாடு சட்டமன்றம் 2024-25 ஆம் ஆண்டிற்கான நிலைக்குழுக்களை 29 ஜூன் 2024 அன்று அமைத்தது. இவற்றுள் இரண்டு சட்டமன்றக் குழுக்கள், அதாவது, பொதுக் கணக்குக் குழு மற்றும் பொது நிறுவனங்கள் குழு, இந்தியத் தணிக்கைத் தலைவரால் தயாரிக்கப்படும், தமிழ்நாடு அரசின் பல்வேறு தணிக்கை அறிக்கைகளைப் பரிசீலிக்கின்றன.
திரு. க.செல்வபெருந்தகை மற்றும் திரு. A.P. நந்தகுமார் ஆகியோர், 2024-25 ஆம் ஆண்டிற்கான மேற்குறிப்பிட்ட குழுக்களின் தலைவர்கள் ஆவர். நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு பொதுக் கணக்குக் குழுவின் அலுவல் உறுப்பினர் ஆவார்.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள குழுக்களின் உறுப்பினர்களுக்கு அவர்களின் கடமைகள் மற்றும் அதிகாரங்கள் குறித்து விளக்கமளிக்கும் வகையில், தமிழ்நாடு முதன்மை கணக்காய்வுத் தலைவர் (தணிக்கை-I) திரு. த. ஜெய்சங்கர், தமிழ்நாடு முதன்மைக் கணக்காய்வுத் தலைவர் (தணிக்கை-II) திரு. கோ.ப. ஆனந்த் ஆகியோர் 30 ஜூலை 2024 அன்று மாலை 5:30 மணிக்கு சென்னை அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் பயிற்சி நிகழ்ச்சியை நடத்தினர்.
வரவேற்பு உரையை மூத்த துணைக் கணக்காய்வுத் தலைவர் திரு. ஆபிரகாம் யூதாஸ் செபாஸ் வழங்கினார். தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் திரு. மு.அப்பாவு குத்துவிளக்கு ஏற்றிவைத்து தொடக்க உரையாற்றினார். கெளரவ விருந்தினரான துணை சபாநாயகர், திரு. கு. பிச்சாண்டி, பொதுக் கணக்குக் குழுத் தலைவர் திரு. கு. செல்வபெருந்தகை, பொது நிறுவனங்கள் குழுத் தலைவர் திரு. A.P. நந்தகுமார் மற்றும் சட்டமன்ற பேரவையின் முதன்மைச் செயலாளர் முனைவர் கி. சீனிவாசன் ஆகியோரும் உரையாற்றினர்.
மூத்த துணைக் கணக்காய்வுத் தலைவர், திரு. க. விஸ்வநாதன் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
***
PKV/RR/KR
(रिलीज़ आईडी: 2039434)
आगंतुक पटल : 477
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English