விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கப் புதிய திட்டங்கள்

Posted On: 30 JUL 2024 6:31PM by PIB Chennai

நாட்டில் உள்ள விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சமீபத்தில் தொடங்கப்பட்ட திட்டங்களில் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (PM-KISAN) எனப்படும் பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவித் திட்டம், 10,000 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்குதலும் ஊக்குவித்தலும், சமையல் எண்ணெய்களுக்கான தேசிய இயக்கம் - எண்ணெய் பனை (NMEO-OP) போன்றவை அடங்கும். வேளாண்மை -விவசாயிகள் நலத்துறையால் அண்மையில் தொடங்கப்பட்ட திட்டங்கள் உட்பட பயனாளிகளை அடிப்படையாகக் கொண்ட முக்கிய திட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

* பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம் கிசான் - விவசாயிகளுக்கான கௌரவ நிதித் திட்டம்)

* பிரதமரின் கிசான் மந்தன் யோஜனா (PM-KMY)

*பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) - பயிர்க் காப்பீட்டுத் திட்டம்

 

*வட்டி மானியத் திட்டம் (ISS)

*வேளாண் உள்கட்டமைப்பு நிதியம் (AIF)

* புதிதாக 10,000 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்குதல், ஊக்குவித்தல்

*ஒரு துளி நீரில் அதிக விளைச்சல் (PDMC)

* வேளாண் விரிவாக்கத்திற்கான துணை இயக்கம் (SMAE)

* வேளாண் இயந்திரமயமாக்கலுக்கான துணை இயக்கம் (SMAM)

* விதை, நடவுப் பொருட்களுக்கான துணை இயக்கம் (SMSP)

* பரம்பரகத் கிருஷி விகாஸ் யோஜனா (PKVY)

*தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் (NFSM)

*ஒருங்கிணைந்த வேளாண் விற்பனைத் திட்டம் (ISAM)

* ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சிக்கான இயக்கம் (MIDH)

*மண்வள ஆரோக்கிய அட்டை (SHC)

 

* மானாவாரிப் பகுதி மேம்பாடு (RAD)

* ராஷ்டிரிய கிருஷி விகாஸ் யோஜனா (RKVY)

* சமையல் எண்ணெய்களுக்கான தேசிய இயக்கம் (NMEO) – எண்ணெய்ப் பனை

*சந்தை தலையீட்டுத் திட்டமும் விலை ஆதரவு திட்டமும் (MIS-PSS)

* தேசிய மூங்கில் இயக்கம் (NBM)

* தேசிய தேனீ வளர்ப்பு, தேன் இயக்கம் (NBHM)

* வடகிழக்கு பிராந்தியத்திற்கான இயற்கை மதிப்புச் சங்கிலி மேம்பாடு

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வேளாண்மை - விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு ராம்நாத் தாக்கூர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

 

 

***


(Release ID: 2039402) Visitor Counter : 80