மத்திய பணியாளர் தேர்வாணையம்
பொறியியல் சேவை முதன்மை தேர்வு 2024-ன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன
Posted On:
30 JUL 2024 6:33PM by PIB Chennai
2024, ஜூன் 23 அன்று மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட பொறியியல் சேவைகளுக்கான முதன்மை தேர்வு முடிவு அடிப்படையில் நேர்முகத் தேர்வு மற்றும் ஆளுமை தேர்வுக்கு தகுதியானவர்கள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பொறியியல் சேவைகள் 2024 விதிகளின் படி, தேர்வாளர்கள் அனைவரும் விரிவான விண்ணப்பத்தை சமர்ப்பிப்பது கட்டாயமாகும். இதற்கான விண்ணப்பம் ஆணையத்தின் https://upsconline.nic.in என்ற இணையதளத்தில் கிடைக்கும். குறிப்பிட்ட கால வரம்புக்குள் விண்ணப்பிக்காவிட்டால் சம்பந்தப்பட்டவர்களின் தேர்வு, ஆணையத்தால் ரத்து செய்யப்படும்.
நேர்காணல்/ ஆளுமை தேர்வுக்கான தேதி தேர்வர்களுக்கு இ-சம்மன் கடிதம் மூலம் தெரிவிக்கப்படும். வரிசை எண் அடிப்படையிலான தேர்வு அட்டவணை ஆணையத்தின் இணையதளத்தில் இடம்பெறும். இது தொடர்பாக, தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://www.upsc.gov.in என்ற ஆணையத்தின் இணையதளத்தை அணுகலாம்.
ஆளுமை தேர்வுக்கு பிந்தைய இறுதி தேர்வு முடிவுகளுக்கு பின் தகுதிபெற்ற, தகுதிபெறாத மதிப்பெண் பட்டியல் ஆணையத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இது 30 நாட்களுக்கு அந்த இணையதளத்தில் கிடைக்கும். விண்ணப்பத்தாரர்கள் தங்களின் பதிவு எண் (ரோல் நம்பர்) பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து அதிகாரப்பூர்வ மதிப்பெண் பட்டியலை பெறலாம். அச்சிடப்பட்ட மதிப்பெண் பட்டியலை பெற விரும்புவோர் தேர்வு முடிவு வெளியிடப்பட்ட 30 நாட்களுக்குள் வேண்டுகோள் கடிதத்தை அனுப்ப வேண்டும். இதற்கு பிந்தயை வேண்டுகோள் ஏற்கபடமாட்டாது.
இணையம் வழியிலான விண்ணப்பப் படிவங்கள் குறித்து பிரச்சனைகள் ஏதும் இருப்பின், பணி நாட்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 23388088/23381125 Ext.4331/4340.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2039222
***
SMB/RS/DL
(Release ID: 2039290)
Visitor Counter : 55