சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
தேசிய வெளிநாட்டு கல்வி உதவித்தொகை: 5 ஆண்டுகளில் 412 பேர் வெளிநாடு சென்றுள்ளனர்
Posted On:
30 JUL 2024 3:22PM by PIB Chennai
தேசிய வெளிநாட்டு கல்வி உதவித்தொகை (என்ஓஎஸ்) திட்டம் என்பது ஷெட்யூல்ட்டு வகுப்பினர், அரை நாடோடி பழங்குடியினர், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள், பாரம்பரிய கைவினைஞர்கள் ஆகியோரில் குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் வெளிநாட்டில் படித்து முதுகலை பட்டம், பிஎச்.டி போன்ற உயர் கல்வியைப் பெற உதவும் மத்திய அரசின் திட்டமாகும்.
ஒவ்வொரு தேர்வு ஆண்டிலும் நிதி இருப்பைப் பொறுத்து125 புதியவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். கல்வி உதவித்தொகை பெறும் 125 மனுதாரர்களில், 115 மனுதாரர்கள் ஆதிதிராவிடர் ஷெட்யூல்ட்டு வகுப்பினர். சீர்மரபினர், அரை நாடோடி பழங்குடியினர் பிரிவில் தலா 6 பேரும், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள், பாரம்பரிய கைவினைஞர்கள் பிரிவில் தலா 4 பேரும் தேர்வு செய்யப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகையில் 30% பெண் விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் அல்லது அதற்கு சமமான தரத்தைப் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் அனைத்து ஆதாரங்களிலிருந்தும் மொத்த குடும்ப வருமானம் முந்தைய நிதியாண்டில் ஆண்டுக்கு ரூ.8.00 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் தேர்வு ஆண்டின் ஏப்ரல் 1-ம் தேதி 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். முதல் 500 கியூஎஸ் தரவரிசை பெற்ற வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் நிபந்தனையற்ற சேர்க்கை சலுகை பெற்றிருக்க வேண்டும்.
கடந்த 5 தேர்வு ஆண்டுகளில் 575 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 412 மாணவர்கள் எனஓஎஸ் திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை பெற்று வெளிநாடு சென்றுள்ளனர். 2021-22 ஆம் ஆண்டு முதல் இடங்களின் எண்ணிக்கை 100 முதல் 125 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இடங்களை மேலும் அதிகரிக்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு ராம்தாஸ் அத்வாலே இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2038977
***
SMB/RS/KR/DL
(Release ID: 2039140)