மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
மத்தியக் கல்வி அமைச்சகத்தின் இந்திய அறிவுமுறை அமைப்புப் பிரிவு, அகில இந்திய கல்வி மாநாட்டில் நூல்களை வெளியிட்டது
प्रविष्टि तिथि:
29 JUL 2024 7:21PM by PIB Chennai
தேசிய கல்விக் கொள்கை 2020-ன் 4 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், கல்வி அமைச்சகம் அகில பாரதிய சிக்ஷா சமகம் (ABSS) 2024 எனப்படும் அகில இந்திய கல்வி மாநாட்டைப் புதுதில்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் கொண்டாடியது. மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு ஜெயந்த் சௌத்ரி மற்றும் கல்வித் துறை இணையமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தார் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். உயர்கல்வித் துறைச் செயலாளர் திரு சஞ்சய் மூர்த்தி, பள்ளிக் கல்வி எழுத்தறிவுத் துறைச் செயலாளர் திரு சஞ்சய் குமார், கல்வியாளர்கள், பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள், அதிகாரிகள், மாணவர்கள் எனப் பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், கல்வி அமைச்சகத்தின் இந்திய அறிவு அமைப்புப் (ஐகேஎஸ்) பிரிவு தயாரித்த பல புத்தகங்கள், விரிவுரைக் குறிப்புகளை அமைச்சர்கள் வெளியிட்டனர். இவை மாணவர்கள், ஆசிரியர்களிடையே இந்திய அறிவுமுறையை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
திருவனந்தபுரம் அகத்தியம் களரியில் உள்ள களரிப்பயட்டு, சித்த மரபுகளுக்கான இந்திய அறிவு முறை (ஐகேஎஸ்) மையத்தின் இணை முதன்மை ஆய்வாளரும், ஐந்தாம் தலைமுறை களரி, சித்த பயிற்சியாளரும், அறிஞருமான குருக்கள் டாக்டர் எஸ்.மகேஷ் எழுதிய அகத்திய முனிவரின் போதனைகளை ஆராயும் நூல் ஒன்று வெளியிடப்பட்டது. இது மனித உடலின் அடிப்படை சக்தி மையங்களை விவரிக்கிறது. சித்த மருத்துவம், களரிப்பயட்டு, வர்மகலை பற்றிய நுண்ணறிவுகளையும் இது வழங்குகிறது. அகத்தியரின் ஆழ்ந்த போதனைகளையும், ஞானத்தையும் இந்நூல் பிரதிபலிக்கிறது.
மற்றொரு புத்தகமான "ஷோதா விஜயா", விஜயநகர கர்நாடக அரசை மையமாகக் கொண்ட தெற்கு வம்சங்களின் மகத்துவம் குறித்த ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்பாகும். டாக்டர் மனோரமா பி.என் அவர்களால் தொகுக்கப்பட்டு வழிகாட்டப்பட்டு, கர்நாடகாவில் உள்ள இந்திய அறிவு அமைப்புகளுக்கான மையமான நூபுரா பிரமாரியால் இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளதுர இது நாடகம், நடனம் முதல் பண்டைய வேதங்கள், தற்கால பயன்பாடுகள் வரை பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கியது.
ஐஐடி ஹைதராபாத்தைச் சேர்ந்த பேராசிரியர் மோகன் ராகவன் எழுதிய இந்திய அறிவு அமைப்புகள், பாரம்பரிய (ஐ.கே.எஸ் & எச்) தொழில்துறையின் நிலை குறித்த அறிக்கையும் நிகழ்ச்சியின் போது வெளியிடப்பட்டது. இது சமையல், ஜவுளி, சுற்றுலா, ஆயுர்வேதம் உள்ளடக்கிய பல்வேறு தொழில் பிரிவுகளை ஆராய்கிறது.
அகில இந்திய கல்வி மாநாடு, இந்திய அறிவு அமைப்புகளின் வளமான பாரம்பரியத்தைக் கொண்டாடியது.
(Release ID: 2038710)
***
(रिलीज़ आईडी: 2038915)
आगंतुक पटल : 84