சுற்றுலா அமைச்சகம்
சுற்றுலாவை மேம்படுத்த புதிய திட்டங்கள்
प्रविष्टि तिथि:
25 JUL 2024 3:00PM by PIB Chennai
நாடு முழுவதும் சுற்றுலா வசதிகளை மேம்படுத்துவதற்காக அந்தந்த மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்களின் முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பதற்காக, மத்திய சுற்றுலா அமைச்சகம் 2014-15-ம் ஆண்டில் தனது முதன்மைத் திட்டமான 'ஸ்வதேஷ் தர்ஷன்' திட்டத்தை அறிமுகப்படுத்தியது, இதன் கீழ் 76 திட்டப் பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.5287.90 கோடி நிதியை மத்திய அரசு அனுமதித்துள்ளது.
சுற்றுலா அமைச்சகம் அண்மையில் ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தை ஸ்வதேஷ் தர்ஷன் 2.0 (எஸ்டி 2.0) என சீரமைத்துள்ளது. இது இடம் சார்ந்த சார்ந்த சுற்றுலாவை மையமாகக் கொண்ட அணுகுமுறையைப் பின்பற்றி நிலையான சுற்றுலா தலங்களை உருவாக்கும் நோக்கத்துடனான திட்டமாகும். மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் கலந்தாலோசித்து, திட்ட வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப, எஸ்டி 2.0 திட்டத்தின் கீழ் சுற்றுலா தல மேம்பாட்டிற்காக நாட்டில் உள்ள 32 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 57 இடங்களை மத்திய சுற்றுலா அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது.
மேலும், சுற்றுலா அமைச்சகம் ஸ்வதேஷ் தர்ஷன் 2.0 திட்டத்தின் கீழ் ஒரு துணைத் திட்டமான 'சவால் அடிப்படையிலான இடங்களின் மேம்பாடு என்ற சிபிடிடி திட்டத்துக்கான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.
இணையதளம், சமூக ஊடகங்கள், விழிப்புணர்வுப் பிரச்சார நிகழ்வுகள், மக்கள் தொடர்புத் திட்டங்கள் போன்ற பல்வேறு விளம்பர நடவடிக்கைகள் மூலம் நாட்டின் பல்வேறு சுற்றுலாத் தலங்களின் சுற்றுலா மேம்பாட்டை மத்திய சுற்றுலா அமைச்சகம் முழுமையாக ஊக்குவிக்கிறது.
----
PLM/KR/DL
(रिलीज़ आईडी: 2038785)
आगंतुक पटल : 93