சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுற்றுலாத் துறை மூலம் வேலைவாய்ப்பை உருவாக்குதல்

இடுகை இடப்பட்ட நாள்: 25 JUL 2024 3:01PM by PIB Chennai

சுற்றுலாத் தலங்களுக்கு அருகில் வசிக்கும் உள்ளூர் மக்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களது திறனை மேம்படுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்த சுற்றுலா அமைச்சகம் நாட்டின் பல்வேறு இடங்களில் இலக்கு அடிப்படையிலான திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டத்தை நடத்துகிறது. இந்த முன்முயற்சியின் கீழ், 145 இடங்களில் சுமார் 12187 நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக சுற்றுலா அமைச்சகம் உள்நாட்டு, சர்வதேச சந்தைகளில் சுற்றுலா தலங்கள் குறித்த தகவல்களை மேம்படுத்தி வழங்குகிறது. சந்தைப்படுத்தல் நிகழ்வுகள், ஊக்குவிப்பு நடவடிக்கைகள், சமூக ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் உட்பட பல்வேறு முயற்சிகள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. மேலும்,சுற்றுலா அமைச்சகம் தனது ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ், தற்போதுள்ள சுற்றுலா இடங்களுக்கும் புதிய சுற்றுலா மேம்பாட்டு இடங்களுக்குமான சுற்றுலா உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக மாநில, யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கும் மத்திய முகமைகள் போன்றவற்றுக்கும் நிதி வழங்குகிறது.

புதிய சுற்றுலாத் தலங்களை உருவாக்குவதற்காக, சுற்றுலா அமைச்சகம் ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தைத் தொடங்கியுள்ளது.  இலக்கு சார்ந்த, சுற்றுலாவை மையமாகக் கொண்ட அணுகுமுறையைப் பின்பற்றி, நிலையான பொறுப்பான சுற்றுலா தலங்களை உருவாக்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.  சுற்றுலா அனுபவத்தை மேம்படுத்துவதற்காக சுற்றுலாத் தலத்தின் முழுமையான வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட ஸ்வதேஷ் தர்ஷன் 2.0-வின் கீழ் துணைத் திட்டமாக சவால் அடிப்படையிலான சுற்றுலா இடங்கள் மேம்பாட்டு (CBDD-சிபிடிடி) திட்டத்தையும் சுற்றுலா அமைச்சகம் உருவாக்கியுள்ளது.

ஸ்வதேஷ் தர்ஷன் 2.0 திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் மாமல்லபுரத்தில் கடற்கரை கோவிலில் ஆழ்ந்த அனுபவம் என்ற பெயரில் திட்டப் பணிகளை மேற்கொள்ள 30.2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிபிடிடி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் கலாச்சார மற்றும் பாரம்பரிய பிரிவில், தஞ்சாவூர் அடையாளம் காணப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்திட்டத்தின் ஆன்மீக தலங்கள் பிரிவில் தமிழ்நாட்டில், ராமேஸ்வரம் அடையாளம் காணப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

மாநிலங்களவையில்  கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுற்றுலா, கலாச்சாரத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

-----

PLM/KR/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2038783) வருகையாளர் எண்ணிக்கை : 127
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Hindi_MP