ஆயுஷ்

யோகா, உணவு முறை குறித்த சிறப்பு சொற்பொழிவுக்கு மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது

Posted On: 29 JUL 2024 6:14PM by PIB Chennai

யோகா, உணவு முறை குறித்த சிறப்பு சொற்பொழிவுக்கு மொரார்ஜி தேசாய் தேசிய யோகா  நிறுவனம், ஏற்பாடு செய்திருந்தது. ஜெய்பூரில் உள்ள தேசிய ஆயுர்வே நிறுவனத்தின் முன்னாள் பேராசிரியர் திரு கமலேஷ் குமார் சர்மா, மொரார்ஜி தேசாய் தேசிய யோகா  நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் காசிநாத் சமகந்தி ஆகியோர் இதில் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

ஆயுர்வேத மருத்துவ நிபுணரான பேராசிரியர் சர்மா பேசிய போது, எப்போது உணவு உண்ண வேண்டும், உணவில் என்ன இருக்க வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும், எந்த முறையில் சாப்பிட வேண்டும் போன்ற உணவு தொடர்பான முக்கிய அம்சங்களை  விரிவாக விளக்கினார். மூன்று வேளை உணவு நம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்றும் முதலாவதாக காலை 9.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரைக்குள்ளாகவும், இரண்டாவதாக மாலையிலும், மூன்றாவதாக  இரவிலும் உண்ண வேண்டும் என்று தெரிவித்தார்.

யோகா பயிற்சிகளின் நன்மைகளை அதிகரிக்க சமவிகித உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். உடலின் சமநிலையை பராமரிப்பதிலும், யோகா ஆசனங்களின் செயல்திறனை அதிகரிப்பதிலும் சரியான ஊட்டச்சத்து முக்கியப் பங்கு வகிக்கிறது என்று அவர் எடுத்துரைத்தார்.

----

IR/KPG/DL



(Release ID: 2038769) Visitor Counter : 34