கலாசாரத்துறை அமைச்சகம்
குதுப்மினார் பராமரிப்பு
प्रविष्टि तिथि:
29 JUL 2024 3:58PM by PIB Chennai
தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு திட்டத்தின் கீழ், தில்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க குதுப்மினார் வளாகத்தை புனரமைக்கும் பணிகள் நான்கு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ள அவர், குதுப்மினார் வளாகத்தில் உள்ள சுற்றுச்சுவர், கிணறுகள், நடைபாதை,பழங்கால குளம், குவாத்துல் இஸ்லாம் மசூதி போன்றவற்றை சீரமைப்பதுடன், சுற்றுலா பயணிகளுக்கான கழிவறை, சாலை உள்ளிட்ட வசதிகளை செய்யவும் ஒளிரும் பெயர் பலகைகள் பொருத்தவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2038491
***
MM/AG/KR/DL
(रिलीज़ आईडी: 2038718)
आगंतुक पटल : 69