கலாசாரத்துறை அமைச்சகம்
தேசிய கலாச்சார நிதி
Posted On:
29 JUL 2024 4:03PM by PIB Chennai
இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்தவும், பாதுகாக்கவும், பொது மற்றும் தனியார் கூட்டாண்மை மூலம் கூடுதல் ஆதாரங்களைத் திரட்டும் நோக்கத்துடன் 1890-ம் ஆண்டு அறக்கட்டளை சட்டத்தின் கீழ் தேசிய கலாச்சார நிதியத்தை ஒரு அறக்கட்டளையாக அரசு 1996, நவம்பர் 28 அன்று அமைத்தது
நினைவுச்சின்னங்களின் பாதுகாப்பு, மேம்பாடு ஆகியவற்றிற்காக நிதியத்தை நிர்வகித்தல் மற்றும் பயன்படுத்துதல்.
வல்லுநர்கள் மற்றும் கலாச்சார நிர்வாகிகளின் பணியிடத்தை உருவாக்க பயிற்சி அளித்தல் மற்றும் வசதி செய்தல்.
தற்போதுள்ள அருங்காட்சியகங்களில் கூடுதல் இடவசதி செய்தல் மற்றும் புதிய மற்றும் சிறப்பு காட்சிக்கூடங்களை உருவாக்க அல்லது இடமளிக்க புதிய அருங்காட்சியகங்களை நிர்மாணித்தல்.
மறைந்து வரும் அல்லது அழிவை எதிர்நோக்கியுள்ள கலாச்சார வெளிப்பாடுகள் மற்றும் வடிவங்களை ஆவணப்படுத்துதல் ஆகியவை தேசிய கலாச்சார நிதியத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
தேசிய கலாச்சார நிதியம் கலாச்சார அமைச்சர் தலைமையிலான நிர்வாகக் குழு மூலம் நிர்வகிக்கப்படுகிறது. அதன் கொள்கைகளை முடிவு செய்ய அதிகபட்சமாக 25 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
அந்தக் கொள்கைகளை செயல்படுத்த கலாச்சார செயலாளர் தலைமையில் அதிகபட்சமாக 11 உறுப்பினர்களைக் கொண்ட செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது.
தேசிய கலாச்சார நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 80 ஜி (ii) இன் கீழ் 100% வரிச் சலுகை ஆகியவை தேசிய நிதியத்தின் அம்சங்களாகும். .
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
---
IR/KPG/KR/DL
(Release ID: 2038717)
Visitor Counter : 51