கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தமிழ்நாட்டில் நூலகங்கள் மேம்பாட்டிற்கு மத்திய அரசு ரூ. 10 கோடி ஒதுக்கீடு

Posted On: 29 JUL 2024 4:05PM by PIB Chennai

மத்திய கலாச்சார துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான ராஜா ராம்மோகன் ராய் நூலக அறக்கட்டளை மூலம்  நாடு முழுவதும் உள்ள நூலகங்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இதன்படி, தமிழ்நாட்டில் உள்ள நூலகங்களுக்கு 2019-20 நிதியாண்டில் ரூ. 1.74 கோடியும், 2020-21 நிதியாண்டில் ரூ. 79 லட்சமும், 2021-22 நிதியாண்டில் ரூ. 1.68 கோடியும், 2022-23 நிதியாண்டில் ரூ. 80 லட்சமும், 2023-24 நிதியாண்டில் ரூ. 1.44  கோடியும் நிதியுதவி வழங்கப்பட்டிருப்பதாக மத்திய கலாச்சாரம், சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரிக்கு  2019-20 நிதியாண்டில்  ரூ.7.81 லட்சமும், 2022-23 நிதியாண்டில் ரூ.5.74 லட்சமும் 2023-24 நிதியாண்டில்  ரூ. 1.92 லட்சமும், நிதி வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

ராஜா ராம்மோகன் ராய் நூலக அறக்கட்டளை மூலம் பொது நூலகங்கள் நவீன மயத்திற்கு தமிழ்நாட்டில் 401 நூலகங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

தேசிய நூலக இயக்கத்தின் கீழ், மாதிரி நூலகம் அமைப்பதற்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட நூலகத்திற்கு 2023-24-ம் நிதியாண்டில் 97.37 லட்சம் ரூபாயும், வேலூர் மாவட்ட நூலகத்திற்கு 91.11 லட்சம் ரூபாயும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்காலில் உள்ள டாக்டர் எஸ் ஆர் ரங்கநாதன் அரசு பொது நூலகத்திற்கு ரூ. 87.02 லட்சமும் வழங்கப்பட்டிருப்பதாக திரு ஷெகாவத் கூறினார்.

கலாச்சார துறையால் மாதிரி நூலகமாக அடையாளம் காணப்பட்டுள்ள தஞ்சாவூர் மகராஜா சரபோஜி சரஸ்வதி மகால் நூலகத்திற்கு ரூ. 6 கோடியே 67 லட்சம் விடுவிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் திரு ஷெகாவத் இன்று மக்களவையில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2038499

***********

SMB/RS/KR/DL


(Release ID: 2038670) Visitor Counter : 94