கலாசாரத்துறை அமைச்சகம்
மூத்த கலைஞர்களுக்கு நிதியுதவி / ஓய்வூதியம்
प्रविष्टि तिथि:
29 JUL 2024 3:59PM by PIB Chennai
நாட்டில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த கலைஞர்களுக்கு நிதியுதவியாக மாதம் 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ள அவர், தாம் சுறுசுறுப்பாக பணியாற்றிய காலத்தில் கலைத்துறைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய அல்லது இன்னும் வழங்கிக் கொண்டிருந்தாலும், வயது முதுமை காரணமாக நிலையான வருமானம் ஈட்ட முடியாத நிலையில் உள்ள கலைஞர்களுக்கு இந்த நிதியுதவி வழங்கப்படுவதாக கூறியுள்ளார். ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாதவர்களுக்கு இந்த நிதியுதவி வழங்கப்படுவதாகவும் அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2038493
***
MM/AG/KR/DL
(रिलीज़ आईडी: 2038668)
आगंतुक पटल : 84