திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

நாடு முழுவதும் உள்ள பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த தொழில்முனைவோரை ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது

Posted On: 29 JUL 2024 2:06PM by PIB Chennai

தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் உள்ள பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த தொழில்முனைவோரை ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொழில் முனைவோரை ஊக்குவிப்பதற்காக அரசின் அமைச்சகங்கள் / துறைகள் மூலம் முன்முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நிதிச் சேவைகள் துறை பிரதமரின் முத்ரா திட்டம் என்பது பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள்,  சிறிய நிதி நிறுவனங்கள் மூலம் ரூ.10 லட்சம் வரை பிணையமில்லா கடன் வழங்குவதற்காக 08.04.2015 அன்று தொடங்கப்பட்டதாகவும், கடன் பெற தகுதியுள்ள மற்றும் சிறு வணிகம் செய்யும் எந்தவொரு தனிநபரும் உற்பத்தி, வர்த்தகம், சேவைத் துறைகள் மற்றும் வேளாண்மை தொடர்பான நடவடிக்கைகள் உள்ளிட்ட மூன்று கடன் பிரிவுகளில் வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளுக்கு இத்திட்டத்தின் கீழ் கடன் பெறலாம். 2024, ஜூன் மாத நிலவரப்படி, பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் மொத்தம் 48.78 கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, 5.55 கோடி கடன்கள் தமிழ்நாட்டில் வழங்கப்பட்டுள்ளன.

05.04.2016 அன்று தொடங்கப்பட்ட ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டம் 2025-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒரு வங்கியின் கிளை, வேளாண் தொடர்பான நடவடிக்கைகள் உட்பட உற்பத்தி, சேவைகள் அல்லது வர்த்தகத் துறைகளில் பசுமை நிறுவனங்களை அமைப்பதற்காக குறைந்தபட்சம் ஷெட்யூல்டு அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் மற்றும் பெண் தொழில் முனைவோர் ஒருவருக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கடன் வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் நாடு முழுவதும் உள்ள எஸ்சி, எஸ்டி மற்றும் பெண் தொழில்முனைவோருக்கு 2.35 லட்சத்துக்கும் மேற்பட்ட கடன்களை வழங்கியுள்ளது, இதில் 2024, ஜூன் மாத நிலவரப்படி தமிழ்நாட்டில் மொத்தம் 22 ஆயிரம் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் புத்தொழில் நிறுவனங்கள், புத்தாக்கம் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப உள்ளிட்ட பல்வேறு புத்தொழில் மையத் திட்டங்களைத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஷெட்யூல்டு மற்றும் பழங்குடியினரின் புத்தொழில் நிறுவனங்களின் சூழல் அமைப்பை ஊக்குவிப்பதற்காக பல்வேறு புத்தொழில் திட்டங்களை தொடங்கியுள்ளது. இந்த முயற்சிகள் சமூக பாகுபாடின்றி புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காக உள்ளன.

தகவல் தொடர்பு தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் நிதி மற்றும் தொழில்நுட்பம் மூலம் தொழில்நுட்ப தொழில் முனைவோரை ஊக்குவிக்க, தொழில்நுட்பக் காப்பகம் மற்றும் தொழில்முனைவோர் வளர்ச்சித் திட்டம் 2.0, 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் புதுமை கண்டுபிடிப்புகள் வர்த்தக காப்பகம் மூலம் 32 புத்தொழில் நிறுவனங்களுக்கும் கோயம்புத்தூரில் உள்ள பிஎஸ்ஜி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொழில் முனைவோர் பூங்கா மூலம் 26 புத்தொழில் நிறுவனங்களுக்கும், சென்னை ஐஐடி-யில் உள்ள ஐஐடிஎம் தொழில்காப்பக பிரிவு மூலம் 38 புத்தொழில் நிறுவனங்களுக்கும் ஆதரவளிக்கப்பட்டுள்ளன.

5 ஆண்டுகளில் ரூ.11.13 கோடி மதிப்பில் 58 ஃபின்டெக் புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க சென்னையில் உள்ள மென்பொருள் தொழில்நுட்ப பூங்காவில் ஃபின்டெக் திறன் மேம்பாட்டு அமைக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசு, தமிழக அரசு, இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்கா ஆகியவற்றின் ஆதரவுடன் அமைக்கப்பட்டுள்ளன.

வேளாண் அல்லாத சிறு தொழில்நிறுவனங்களை அமைப்பதற்காக புத்தொழில் கிராம தொழில்முனைவோர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான உதவி, சுயஉதவிக் குழுக்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர், மதுரை மாவட்டம் திருமங்கலம், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் வெண்ணாந்தூர், விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உள்ளிட்ட பத்து இடங்களில் புத்தொழில் கிராம தொழில்முனைவோர் திட்டம் அமல்படுத்துவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.

இத்தகவலை மத்திய திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சவுத்ரி மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2038403

---- 

IR/KPG/KR



(Release ID: 2038527) Visitor Counter : 39


Read this release in: English , Hindi , Hindi_MP , Manipuri