திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 1,19,710 பேர் பயிற்சி பெற்றுள்ளனர்

प्रविष्टि तिथि: 29 JUL 2024 1:55PM by PIB Chennai

பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 1,53,667 பேர் பதிவு செய்துள்ளனர் என்றும், அதில் 1,19,710 பேர் பயிற்சி பெற்றுள்ளனர் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் இன்று மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இந்தத் திட்டத்தின் கீழ், 95,62,033 பேர் பதிவு செய்ததில் 78,96,285 பேர் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்றுள்ளனர் என அவர் கூறியுள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ், 6,380.87 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றும், 4,906.49 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2038374

***

PKV/RR/BR


(रिलीज़ आईडी: 2038522) आगंतुक पटल : 91
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP , Manipuri , Punjabi