சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுற்றுச்சூழலை பாதிக்கும் அபாயகரமான கழிவுகளை நிர்வகிப்பதற்கான விதிமுறைகள்

இடுகை இடப்பட்ட நாள்: 29 JUL 2024 12:12PM by PIB Chennai

சுற்றுச்சூழலை பாதிக்கும் அபாயகரமான கழிவுகளை  நிர்வகிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகள் பற்றிய  விவரம் https://cpcb.nic.in/technical-guidelines/ என்ற இணையதளத்தில் கிடைக்கிறது. 71 வகையிலான அபாயகரமான கழிவுகளை ஆதார வளங்களாக பயன்படுத்துவதற்கு 102 நிலையான  செயல்பாட்டு விதிமுறைகளையும் மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. இதன் விவரம் http://cpcb.nic.in/sop-for-hw-specific/ என்ற இணையதளத்தில் கிடைக்கிறது.

அபாயகரமான மற்றும் இதர கழிவுகள் நிர்வாகத்திற்கான 2016-ம் ஆண்டின்  விதிகளில் உள்ள  23 (2) விதியின்படி, செயல்படாத 283 அலகுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி,  8 மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியங்கள்/ மாசுகட்டுப்பாட்டு குழுக்களிடமிருந்து ஆலோசனைகளை மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியம் பெற்றுள்ளது. இதன்படி தமிழ்நாட்டிலிருந்து மூன்று ஆலோசனைகளும், புதுச்சேரியில் இருந்து ஒரு ஆலோசனையும் பெறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் இருந்து 238 ஆலோசனைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. குஜராத்தில் இருந்து 17, சத்தீஷ்கரில் இருந்து 16, ஹரியானவில் இருந்து 2, கர்நாடாகவில் இருந்து 4, ஒரிசாவில் இருந்து 2 என்ற எண்ணிக்கையில் மற்ற மாநிலங்களின் ஆலோசனைகள் உள்ளன.

இந்தத் தகவலை மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் இன்று மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2038294

-------------

SMB/RS/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2038406) வருகையாளர் எண்ணிக்கை : 117
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Hindi_MP , Telugu