சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
தேசிய சுகாதார உரிமைகோரல் பரிமாற்றம் குறித்த புதுப்பிப்பு
Posted On:
26 JUL 2024 6:02PM by PIB Chennai
ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின் (ABDM) கீழ் மத்திய அரசு தேசிய சுகாதார உரிமைகோரல் பரிமாற்றத்தின் (என்எச்சிஎக்ஸ்) நுழைவாயிலை உருவாக்கியுள்ளது என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் ஸ்ரீ பிரதாப்ராவ் கணபத்ராவ் ஜாதவ் தெரிவித்தார்.
இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்த அவர், இந்த பரிமாற்ற அமைப்பானது உடல்நலக் காப்பீட்டுக் கோரிக்கை செயலாக்கத்தை ஒழுங்குபடுத்துதல் மற்றும் தரப்படுத்துதல், காப்பீட்டுத் துறையில் செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் நோயாளியின் அனுபவத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார். என்எச்சிஎக்ஸ் -ஆனது காப்பீட்டாளர்கள், மூன்றாம் தரப்பு தணிக்கையாளர்கள், சுகாதார வழங்குநர்கள், பயனாளிகள் மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்களிடையே சுகாதார உரிமைகோரல் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கான நுழைவாயிலாக செயல்படுகிறது என்றும் அவர் கூறினார்.
தகவல் பரிமாற்றத்தையும் துல்லியமானதாகவும் நம்பத்தகுந்ததாகவும் ஆக்குவதால் இந்த அமைப்பு காப்பீட்டுத் துறையில் செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதோடு, பாலிசிதாரர்கள் மற்றும் நோயாளிகளுக்கு பயனளிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) மற்றும் பொதுகாப்பீட்டு கவுன்சில் (ஜிஐசி) ஆகியவற்றின் ஆதரவுடன், என்எச்சிஎக்ஸ் தரப்படுத்தப்பட்ட மற்றும் விரைவான சுகாதார காப்பீட்டு கோரிக்கை செயலாக்கத்தை செயல்படுத்தும். 21.07.2024 நிலவரப்படி, 34 காப்பீட்டாளர்கள் மற்றும் மூன்றாம் தரப்பு நிர்வாகிகள் (டிபிஏக்கள்) என்எச்சிஎக்ஸ்- இல் தற்போது நேரலையில் உள்ளனர். மேலும் சுமார் 300 மருத்துவமனைகள் இதில் தங்கள் கோரிக்கைகளை அனுப்பத் தொடங்கியுள்ளன என்ற தகவலையும் அமைச்சர் கூறினார்.
*****
VK/DL
(Release ID: 2038073)
Visitor Counter : 55